ஒலிம்பிக் தகுதிச்சுற்று ஹாக்கி ரஷ்யா, அமெரிக்காவுடன் இந்தியா மோதல்!

ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஹாக்கிப் போட்டியில் இன்றும், நாளையும் இந்தியா ஹாக்கி அணிகள் ரஷ்ய, அமெரிக்க அணிகளுடன் மோத உள்ளன. ஜப்பான் தலைநகர் ேடாக்கியாவில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இதன் ஹாக்கிப் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் விளையாட உள்ளன.
இந்தப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா அரங்கில் இன்றும் நாளையும் நடைபெற உள்ளன. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்தியா ஆண்கள் அணி இன்றும், நாளையும் ரஷ்ய அணியை எதிர்த்து விளையாட உள்ளது. உலக அரங்கில் இந்தியா 5 வது நிலையிலும், ரஷ்யா 22வது நிலையிலும் உள்ளன. ராணி ராம்பால் தலைமையிலான பெண்கள் அணி இன்றும், நாளையும் அமெரிக்க அணியை எதிர்ந்து விளையாட உள்ளது. உலக அரங்கில் இந்திய பெண்கள் அணி 9வது இடத்திலும் அமெரிக்கா 13வது இடத்திலும் உள்ளன.


பெண்கள் விளையாடும் போட்டிகள் மாலை 6 மணிக்கும், ஆண்கள் விளையாடும் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்கும். ரஷ்யா, அமெரிக்கா அணிகள் வலுவான அணிகளாக இருந்தாலும் உள்ளூரில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். அதுமட்டுமின்றி சமீபத்தில் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப்போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் இந்திய அணிகள், அடுத்து ரஷ்யா, அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளில் பெறும் வெற்றிகளை பொறுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது உறுதியாகும்.ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கி விளையாட ஆண்கள் பிரிவில் ஜப்பான், அர்ஜென்டீனா, தென் ஆப்ரிக்கா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, பெண்கள் பிரிவில் ஜப்பான், அர்ஜென்டீனா, தென் ஆப்ரிக்கா நெதர்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதிப் பெற்று விட்டன.


ரஷ்யா, அமெரிக்காவை எதிர்கொள்ள உள்ள இந்தியா அணிகள்: ஆண்கள்: மன்பிரீத் சிங்(கேப்டன்), எஸ்வி சுனில்(து.கேப்டன்), பிஆர் ஸ்ரீஜேஷ், கிரிஷன் பதக், ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், சுரேந்தர் குமார், குரீந்தர் சிங், ரூபிந்தர்பால் சிங், அமீத் ரோகிதாஸ், நீலகாந்தா சர்மா, ஹர்திக் சிங், விவேக் சாகர், லலித் குமார், மன்தீப் சிங்கு, அக்‌ஷதீப் சிங், ரமன்தீப் சிங், சிம்ரன்ஜித் சிங். பெண்கள்: ராணி ராம்பால்(கேப்டன்), சவீதா(து.கேப்டன்), ரஜனி எடிமர்பு, தீப் கிரேஸ், குர்ஜித் கவுர், ரீனா கோகர், சலீமா தட்டே, சுசிலா சானு, நிக்கி பிரதான், மோனிகா, நேஹா கோயல், லில்லிமா மின்ஸ், நமீதா டோபோ, வந்தனா கட்டாரியா, நவனீத் கவுர், லால்ரேம்சிமி, நவஜோத் கவுர், ஷர்மிளா தேவி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.