அனுஷ்கா மீது முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!
எவ்வித தகுதியும் இல்லாதவர்கள் இந்திய அணி தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். கடந்த உலக கோப்பை தொடரில், தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர், கோஹ்லியின் மனைவி அனுஷ்காவுக்கு தேநீர் தந்து கொண்டிருந்தார்,'' என, இந்திய முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் பரூக் இன்ஜினியர், 81. எம்.எஸ்.கே., பிரசாத் தலைமையிலான, இந்திய அணி தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து பரூக் இன்ஜினியர் கூறியது:
உச்ச நீதிமன்றம், லோதா குழு இந்திய கிரிக்கெட்டை சீரமைக்கும் எண்ணத்துடன் செயல்பட்டன. இதற்காக, நியமிக்கப்பட்ட நபர்கள் சரியானவர்கள் அல்ல. கிரிக்கெட் நிர்வாக குழுவில் (சி.ஓ.ஏ.,) இடம்பெற்றிருந்த முன்னாள் வீராங்கனை டயானா எடுல்ஜி சில போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். ஆனால், இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்க சர்வதேச அரங்கில் சாதித்தவர்கள் தான் சரியாக இருப்பர் என்பதை மறந்து விட்டனர். ஆனால் இக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர், தனது பணிக்காக ரூ. 3.5 கோடி பெற்றுள்ளார்.
தேனிலவு முடிந்தது
இது தவிர, ஒவ்வொரு கூட்டத்தில் பங்கேற்றதற்கும் ஆயிரக்கணக்கில் ஊதியம் பெற்றுள்ளனர். இதை மிகப்பெரிய குற்றம். சி.ஓ.ஏ.,வில் இடம்பெற்றிருந்தவர்கள் தேனிலவுக்கு வந்ததுபோல இருந்தனர். தற்போது இது முடிவுக்கு வந்துள்ளது. பி.சி.சி.ஐ.,க்கு புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள கங்குலி, உறுதியான முடிவுகள் எடுக்கக்கூடியவர்.
இந்திய அணி தேர்வுக்குழு, ஒரு 'மிக்கி மவுஸ்' கமிட்டி போலத்தான் இருக்கிறது. இக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் எந்த முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர் எனத் தெரியவில்லை. இவர்கள் மொத்தமே 10 முதல் 12 டெஸ்ட் போட்டிதான் விளையாடி உள்ளனர். கடந்த உலக கோப்பையில், தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் மனைவி அனுஷ்காவுக்கு தேநீர் தந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு பரூக் இன்ஜினியர் கூறினார்.
அனுஷ்கா சர்மா மறுப்பு
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை