வட கொரியா ஏவுகணை சோதனை தென்கொரியா, ஜப்பான் புகார்!

வடகொரியா இரண்டு ஏவுகணைகளை பரிசோதித்ததாக, ஜப்பான் கடற்படை மற்றும் தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, கிழக்கு ஆசிய நாடான வடகொரியா, ஏவுகணை சோதனைகளை,
தொடர்ந்து நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள், கடுமையாக எதிர்த்து வருகின்றன.இந்தநிலையில், வடகொரியா நேற்று இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக, தென் கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது, இதுகுறித்து ஜப்பான் கடற்படை கூறுகையில்,'கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே கிழக்கு கடற்பகுதியில், இரண்டு ஏவுகணைகளை ஏவி, வடகொரியா சோதனை நடத்தி உள்ளது. இவை குறுகிய தூர தொலைவு சென்று இலக்கை தாக்கும் ஏவுகணைகள்' என்றது. தென் கொரிய ராணுவ தரப்பும், வடகொரியா, ஏவுகணை சோதனைகளை நடத்தியதாக தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.