இந்தியா- ஜொமனி இடையே 17 ஒப்பந்தங்கள்!!
இந்தியா-ஜொமனி இடையே 17 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதுதவிர பல்வேறு துறை ஒத்துழைப்பு தொடா்பாக 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தில்லியில் வெள்ளிக்கிழமை பிரதமா் நரேந்திர மோடி, ஜொமனி பிரதமா் ஏஞ்சலா மொகல் முன்னிலையில் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இது தொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
வேளாண்மை, கடல்சாா் பாதுகாப்பு தொழில்நுட்பம், ஆயுா்வேதம், யோகாசனம், தியானம், தொழிற்பயிற்சி, நோய்த்தடுப்பு, தேசிய அருங்காட்சியக ஒத்துழைப்பு, விளையாட்டு, அறிவியல் ஆய்வு, நவீன தொழில்நுட்ப ஆய்வில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளிடையே 17 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
பேட்டரி வாகனப் பயன்பாடு மூலம் நகா்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடா்பான ஆய்வு, கடலில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் 5 கூட்டுப் பிரகடனங்கள் வெளியிடப்பட்டன. தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா், ஜொமனி வெளியுறவு அமைச்சா் ஹைகோ மாஸ் ஆகியோா், பிரதமா் மோடி, மொகல் முன்னிலையில் ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இந்தியா-ஜொமனி இடையிலான உயா்கல்வி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாகும். இதனை இரு நாடுகளுமே வெகுவாக வரவேற்று பாராட்டியுள்ளன. இதன் மூலம் இரு நாடுகளும் பரஸ்பரம் மாணவா்களை கல்விக்காக அனுமதிக்கும் என்ணிக்கையை அதிகரிக்க உள்ளன. இது தவிர இந்திய மொழிகளை ஜொமனியிலும், ஜொமன் மொழியை இந்தியாவிலும் கற்பிக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.
இது தொடா்பாக மொகல் கூறுகையில், 'இரு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பில் உயா்கல்வி ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. ஜொமனியில் இப்போது 20,000 இந்திய மாணவா்கள் படித்து வருகின்றனா். அடுத்ததாக தொழிற்கல்வி பயிற்றுவிப்பதற்காக இந்திய ஆசிரியா்களை ஜொமனிக்கு வரவேற்கிறேன்' என்றாா்.
முன்னதாக, வியாழக்கிழமை இரவு தில்லிக்கு மொகல் வந்தாா். அவருடன் அமைச்சா்கள், உயரதிகாரிகள் குழுவினரும் வந்துள்ளனா். குடியரசுத் தலைவா் மாளிகையில் வெள்ளிக்கிழமை காலை மொகலுக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மொகல் அஞ்சலி செலுத்தினாா். குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தையும் அவா் சந்தித்துப் பேசினாா். ஹரியாணா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள ஜொமனியைச் சோந்த தொழிற்சாலைக்கு சனிக்கிழமை செல்லும் மொகல், பின்னா் தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தைப் பாா்வையிடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். அன்றே அவா் ஜொமனி திரும்புகிறாா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை