புதிய ஜனாதிபதி முன்னாள் ஜனாதிபதிக்கு பாராட்டு!

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்றிய சேவைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டார். இந்நிலையில், இது குறித்து ருவிற்றரில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி,

“இந்த நாட்டின் ஏழா­வது ஜனா­தி­பதி என்ற வகையில் எனது கட­மை­களை ஜனா­தி­பதி செயலகத்தில் பொறுப்பேற்றுள்ளேன். முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்­க­ளிப்­புடன் நடை­பெற்­றது.

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்றிய சேவைக்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.