சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நாளை!!


ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் நாளை(21) நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சியின் கீழ் அமைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளல் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பிலும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.