29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்கிறார் கோட்டாபய ராஜபக்க்ஷ!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.


நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார்.

இதன்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

அந்த அழைப்பிதழை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிவிகார அமைச்சின் செயலாளராக ரவிநாத ஆரியசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் முதற்தடவையாக அவர் தலதாமாளிகைக்கு விஜயம் செய்கிறார்.

இதனையடுத்து, மல்வத்த மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்க தேரரை சந்தித்து அவர் ஆசிர்வாதம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்னர், அஸ்கிரிய மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரை சந்தித்து ஜனாதிபதி ஆசிர்வாதம் பெறவுள்ளார்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.