மன்னார் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிப்பு!
மன்னார் பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இன்று 12 வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
21 உறுப்பினர்களைக் கொண்ட மன்னார் பிரதேச சபையில் ,ஐ. தே.கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 6 உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏனைய கட்சி ஆதரவுடன் கடந்த 10.05.2018 தொடக்கம் ஆட்சி அமைத்து தவிசாளர் சாகுல் கமில் முகமட் முஜாகிர் தலைமையில் மன்னார் பிரதேச சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் சபை நடவடிக்கை ஆரம்பிக்க இருந்த போதும் சுமார் 11 மணியளவிலேயே சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது 2020ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் முறைப்படி தவிசாளரினால் மன்னார் பிரதேச சபை செயலாளருக்கு வழங்கப்பட்டு ஆதரவளிக்கும் பிரேரணை தவிசாளரினால் முன்வைக்கப்பட்டது.
அதனையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக கட்சி சார்பாக தன்னிச்சையாகச் செயல்படுதல், நம்பகத்தன்மையின்மை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் செயல் படுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்தர்.
அத்துடன் தவிசாளர் மீது நம்பிக்கையில்லப் பிரேரணை ஊடாக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிரான பிரேரணையை முன்வைத்தார்.
இதை உறுப்பினர் ஞானப்பிரகாசம் ரிச்சேட் முன்மொழிய உறுப்பினர் பாலசிங்கம் கதிர்காமநாதன் வழி மொழிந்தார்.
இதற்கு ஆதரவான உறுப்பினர்கள் தமது ஆதரவை தெரிவித்த நிலையில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்த தவிசாளர் நிதிக்குழுவின் தீர்மானத்திற்காமைவான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சரியானதென வாதிட்டனர். இதற்கு ஆதரவு இல்லாத நிலையில் வாக்கெடுப்பு இடம் பெற்று திட்டத்திற்கு ஆதரவாக 7 உறுப்பினர்களும் எதிராக 12 உறுப்பினர்களும் வாக்களித்ததுடன் உதவித் தவிசாளர் இஸ்மாயில் முகமட் ஸ்சதீன் நடு நிலையாகச் செயல் பட்டார்.
இந்நிலையில் ஒரு உறுப்பினர் அமர்வுக்கு சமூகமளிக்காமலும் வரவு செலவுத் திட்டம் ஆதரவு இல்லாமல் 2020 ஆம் ஆண்டிற்கான மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.
இதேவேளை கடந்த 07 ஆம் திகதி மன்னார் பிரதேச சபையின் 20ஆவது அமர்வின் போது குறித்த விவகாரம் முன்வைக்கப்பட்ட போது சபையில் அமளி துமளி ஏற்பட்டு தவிசாளரினால் எந்த ஒரு காரணமும் இல்லாது சபை 14 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனையடுத்து சபை இன்று இடம் பெற்ற நிலையிலே மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை