புவிசார் நெருக்கடிக்குள் இருந்து கோத்தபாய மீள முடியாது!!

யாரும் பதட்டப்பட வேண்டாம். கோத்தபாய ஜனாதிபதி என்பது கடந்த இரண்டு வருடங்களாக பிராந்திய/ மேற்குலக அரசுகள் நடத்திய தெளிவான நிகழ்ச்சி நிரல்களின் விளைவு.

ஈழப் போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த பலரும் அறிந்த ஒன்றுதான் இது.

அதனால்தான் தேர்தலைப் புறக்கணிப்பதனூடாக தமிழர் தேசம் சார்ந்த அரசியலை எழுத முடியும் என்று கடுமையாக முயற்சித்தார்கள்.

இதில் பாதி வெற்றிதான் கிடைத்திருக்கிறது.

கோத்தா வந்தால் வெள்ளை வான் ஓடும் என்பதெல்லாம் பச்சைப் பொய்.  மைத்ரி ஆட்சியை விட நெருக்கடி குறைவாகவே இருக்கும். இதுதான் உண்மை.

தமிழரசுக் கட்சியும் அவர்கள் அடிப்பொடிகளும் சொன்னது பச்சைப் பொய்.

இதன் மூலம் கோத்தா திருந்திவிட்டான் என்று அர்த்தமில்லை. மகிந்த குடும்பம் தம்மைப் பாதுகாக்க இந்த நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் புவிசார் நெருக்கடிக்குள் இருந்து கோத்தபாய மீள முடியாது.

இதன் மூலம் இந்த மாவீரர் மாதத்தில் மாவீரர் கனவுக்கு வடிவம் கொடுக்கும் முதல் அடியை தமிழர் தேசம் எடுத்து வைக்கிறது.

வெல்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.