ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் - தொழிற்கட்சி!!
இலங்கையில் போர் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும் போர்க்குற்றங்கள் மற்றும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை, அச்சுறுத்தல்களுக்கு எந்தவிதமான பொறுப்புணர்வும் அங்கு ஏற்படவில்லை.
தொழிற்கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்குமானால் இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்கட்சி வெளியிட்ட தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிற்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரான ஜோன் மக்டோனல் கூறுகையில்; தமிழ் மக்களின் போராட்டத்தில் நாம் தொடர்ந்தும் அவர்களுக்குப் பக்கபலமாக நிற்போம் என்று தனது ருவிற்றர் பக்கத்தில் காணொளி மூலமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு அமைதிவழியில் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் அவ் அரசியல் தீர்வு தமிழர்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் அமைவது முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்படுவது, புதிய ஜனாதிபதி பதவியேற்றிருப்பது போன்றவை எதிர்காலம் பற்றிய கவலையைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை