பரணி பாடுவோம் - கவிதை!!
வீரத்தின் திருவுருவாய்
புலிப்போத்து பிறந்ததென்று
பரணி பாடுவோம்.
தமிழ் ஈழம் பூத்திட
தமிழ்மானம் காத்திட
உயிர்ப்பூ உதித்ததே
பரணி பாடுவோம்.
கள வீரனாகினான்
உளத் தூதனாகினான்
சினம் கொண்டே அவன்
சிதை மூட்டினான்.
பரணி பாடுவோம்.
உலகத்தில் தமிழர்க்கு
உன்னால்தான் முகவரி,
ஓயாத தழிழ் வீரம்
அதற்கு நீ தனிவரி,
பரணி பாடுவோம்.
அஞ்சிடா வீரனாய்
துஞ்சிடா மறவனாய்
எங்கணும் ஒலித்ததே
பிரபாகரம் திருநாமம்
பரணிபாடுவோம்.
காலங்கள் சிதையலாம்,
கோலங்கள் கலையலாம்
நீயெனும் நெருப்பது
நீறுபோல் தகிக்குமே...
பரணி பாடுவோம்.
வீர தேசம் மலர்ந்திட
விதைக்கு நீ குருதி பாய்ச்சினாய்,
அண்ணன் என்ற அற்புதத்தின்
அகராதி நீயாகினாய்.
பரணி பாடுவோம்....
உன்னைப் போற்றிட
உனக்காக எழுதிட
போதாது தமிழ் வரிகள்
பூலோகம் உனக்காக
பூத்தது இன்றென
பரணி பாடுவோம்.
புலிப்போத்து பிறந்ததென்று
பரணி பாடுவோம்.
புவி ஆழ மலர்ந்ததென்று
பரணி பாடுவோம்.........
தமிழரசி
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)





கருத்துகள் இல்லை