ஒரு தீவு ;இரண்டு தேசங்கள்.!!

தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு போராட்ட வரலாற்றை கண்டு 2009 ஆண்டு சர்வதேச சதிகளாலும் உலக மற்றும் பிராந்திய ஒழுங்கு பயங்கரவாதத்தாலும் மௌனிக்க வைக்கப்பட்டது.

புலிகளால் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவு கூறும் விதமாகவும் அப்போராளிகளின் ஆன்மாக்களின் வழியாக விடுதலைப் போராட்ட களத்திற்கு உத்வேகம் கொடுக்கவும் மாவீரர் தினம் புலிகளின் காலத்தில் 89லிருந்து தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது.

அந்நாளை மிகுந்த முக்கியத்துவம் உடைய நாளாக மாற்ற புலிகளின் தலைமை சிரத்தை எடுத்து மக்களின் மனங்களில் ஆழப் பதியவும் வைத்து விட்டது. வேறெந்த நாளிலும் வெளிப்படையாக தோன்றாது தலைவர் பிராபாகரன்  அன்றைய தினத்தில் மட்டுமே தோன்றி மாவீரர் உரை நிகழ்த்துவார். அதி இரகசியம் காக்கும் புலிகளின் குரலை அன்று தான் சகலவரும் கேட்க முடியும். புலிகளின் தேர்ந்த உளவியல் நடவடிக்கையால் தமிழீழ தேசிய நாளாக மாவீரர் தினம் மாற்றப்பட்டு விட்டது.

 2009 பின்பு நடந்தது தான் புலிகளின் சாதனையின் வீரியத்தை எதிரிகளுக்கு உணர்த்தியது.

களத்தில் புலிகள் இல்லை. எங்கும் சிங்கள இராணுவம் புலி என்றோ மாவீரர் என்றோ ஏதும் பேச முடியாத நிலை .
இந்த சூனியமயமான நாட்களில் தான் மக்களே சிறிது சிறிதாக மாவீரர் நாளை கடைப்பிடிக்கத் தொடங்கி பத்தாண்டு கடந்த  இன்றைய ஆண்டு மாவீரர் தினத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தமிழீழம் எங்கும் விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரச் செல்வங்களை நினைவு கூர்ந்து உள்ளனர். கோத்தபாய ஆண்டால் என்ன? யார் ஆண்டால் என்ன ? என்று கடுமையான இராணுவ அடக்குமுறைகளை யெல்லாம் தகர்த்தெறிந்து விட்டனர் தமிழீழ மக்கள்.

புலிப் பயங்கரவாதம் புலிகள் பயஙகரவாதிகள் என்று கதையளுக்கும் சிங்களம் ஒரு தரப்பாகவும் புலிகளே எம்மண்னை காத்த காவல் தெய்வங்கள் என தமிழீழம் மறு தரப்பாகவும் இலங்கைத் தீவில் நிற்கிறது.

 சர்வதேசம் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக தெற்காசிய பிராந்திய நாடுகள் இரு வேறு தரப்பாக இரு வேறு தேசங்களாக மக்கள் திரண்டு நிற்ப்பதை அங்கரிக்க வேண்டும். புலிகளையும் மக்களையும் கொன்று சாதனை படைத்த கொலைகாரன் கோத்தபாய சிங்களத்தின் பிரதிநிதி விடுதலை புலிகள் (மாவீரர்கள்) தமிழர்கள் பிரதிநிதிகள். சமப் படுத்தவே இயலாத முரண்பாட்டை தனியரசின் வழியில் மட்டுமே தீர்க்க இயலும். தகராறு மேலான்மையில் நிபுணந்துவம்பெற்ற மேற்கத்திய வல்லாதிக்க சர்வதேசம் இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் நிற்கிறது.

விடுதலை தீயில் தன்னை ஆகுதியாக்கிக் கொண்ட தமிழர்களுக்கு
தமிழீழத் தனியரசே ஒரே நீதி.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.