வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம்: தடுத்த பாஜக, கண்டுகொள்ளாத திமுக?
சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், கவிஞர் வைரமுத்துவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டம் வழங்குவதாக அழைப்பிதழும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக பாஜகவினர் ஆண்டாள் பிரச்சினையை முன் வைத்து வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ராஜ்நாத் சிங் வரக் கூடாது என்று ராஜ்நாத் சிங் அலுவலகத்துக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இதையடுத்து ராஜ்நாத் சிங்கின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து, ஆண்டாள் அரசியல்-வைரமுத்துக்கு பட்டம் -ராஜ்நாத் சிங் வருகை ரத்து என்ற தலைப்பில் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படியே ராஜ்நாத் சிங் வருகை ரத்து செய்யப்பட்டது. இதில் முதல் வெற்றியடைந்த பாஜக, அடுத்து ராஜ்நாத் சிங் வருகை ரத்தானதோடு வைரமுத்துவும் விழாவுக்கு வந்து விருது பெறக் கூடாது என்று அழுத்தம் கொடுத்திருக்கிறது. ராஜ்நாத் சிங் விழாவுக்கு வரவில்லை என்றதுமே தன்னால் நிகழ்ச்சி மேலும் சர்ச்சையாகிவிடக் கூடாது என்பதற்காக வைரமுத்துவே தான் வருவதைத் தவிர்த்துவிட்டார் என்றும் பல்கலை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே, பாலகிருஷ்ணன், “பாஜகவினரும், மதவெறி சக்திகளும் எதிர்ப்பு தெரிவித்ததால் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விழாவிற்கு வராமல் ரத்து செய்துள்ளதும், இதனால் வைரமுத்துவிற்கு டாக்டர் பட்டம் வழங்குவது தடைபட்டுள்ளதும் அறிய முடிகிறது. இது வன்மையான கண்டனத்திற்குரியது.
கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவது, விருது வழங்குவது போன்ற முடிவுகளை எடுப்பதற்கு பல்கலைக்கழக கல்வி நிர்வாகங்களுக்கு உரிமையுண்டு. பல்வேறு துறைகளில் சாதித்துள்ள துறை வல்லுநர்களுக்கு அவர்கள் சாதித்துள்ள சாதனைகள் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுவதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் தலையிடுவது பொருத்தமானதல்ல. அத்தகைய நடைமுறைகள் அதிகரிக்குமானால் பல்கலைக்கழகங்களின் சுயாட்சித் தன்மை பாதிப்புக்குள்ளாகும்.
இதுமட்டுமல்லாது கவிஞர் வைரமுத்து, தமிழ் இலக்கியத்தில் பல்வேறு சாதனைகளை ஆற்றியுள்ளார். திரைப்பட உலகில் பாடலாசிரியராக தனி முத்திரைப் பதித்தவர். அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க பல்கலைக்கழகம் முடிவெடுத்தது பொருத்தமானதே. தனிப்பட்ட நபர் என்பதை விட தமிழ்மொழிக்கு சேவை செய்திருக்கிற ஒரு கவிஞர் என்கிற வகையில் அவரது பங்களிப்பினை கௌரவப்படுத்துவது சரியானதே.தொடர்ந்து தமிழ்மொழிக்கு எதிராகவும், தமிழ் பண்பாட்டிற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிற இந்துத்துவ மதவெறி சக்திகளின் தொடர் நடவடிக்கையாகவே இது அமைந்துள்ளது.
பல்கலைக்கழக மற்றும் கல்வித்துறை செயல்பாடுகளில் மதச்சார்பின்மைக்கு எதிரான சக்திகளின் தலையீடு அபாயகரமானது என்பதையும், தமிழக ஜனநாயக சக்திகள் இதனை அனுமதிக்கக் கூடாது. இப்பின்னணியில் சென்னை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இந்துத்துவ மதவெறி சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு இரையாகாமல் ஏற்கனவே திட்டமிட்டுள்ளபடி கவிஞர் வைரமுத்துவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் பற்றி தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கையிலும், “ ஆண்டாள் பற்றிய தனது கட்டுரையில் ஓர் ஆய்வு முடிவினை மேற்கோள் காட்டியதற்காக அன்று வைரமுத்து மீது பாய்ந்தனர் பாஜக தலைவர்கள். சநாதன நோக்கிலிருந்தும், மதவெறி போக்கிலிருந்தும் அவர்கள் அந்தத் தாக்குதலைத் தொடுத்தனர். அது கருத்துரிமை மீதும், ஆய்வுரிமை மீதும் வீசப்பட்ட வெட்டரிவாளாக இருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே டாக்டர் பட்டம் வழங்கும் விழாவிற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் வரக்கூடாது என்று வம்பு செய்து அவரைத் தடுத்திருக்கிறார்கள். அவரும் அதற்குப் பணிந்து தனது பங்கேற்பை ரத்து செய்திருக்கிறார். இந்திய நாட்டின் மத்திய அமைச்சர் ஒரு கட்சிக்காரராக மாறி நமது தமிழ்க்கவியை அவமானப்படுத்த முனைந்திருக்கிறார்
தமிழ்க்கவி வைரமுத்துவுக்கு மத்திய அமைச்சரும் தமிழக பாஜகவும் செய்துள்ள இந்த அநீதி ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கு செய்யப்பட்டுள்ள அநீதியாகும். பழமைவாத மற்றும் வகுப்புவாத நோக்கிலிருந்து இழைக்கப்பட்டுள்ள இந்த அநியாயத்தை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது” என்று கூறியுள்ளனர்.
வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக மூன்று நாட்களாக சர்ச்சை நிலவி வரும் நிலையில், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கும் எஸ்.ஆர்.எம். பல்கலையின் வேந்தர் பாரிவேந்தர் திமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் நிலையில்... இது தொடர்பாக திமுக தரப்பில் இருந்து எந்த ஆதரவுக்குரலும் வைரமுத்துவுக்கோ, எஸ்.ஆர். எம். பல்கலைக்கோ இதுவரை வெளிப்படையாக வரவில்லை.

கருத்துகள் இல்லை