இந்தியாவின் சாஞ்சியில் சிங்கள பெயர்பலகைகள்!!

இந்தியாவின் சாஞ்சி புத்த மடத்திலுள்ள பெயர்ப்பலகைகளில் சிங்களமும் இடம்பெற்றுள்ளது.


இதுவரை இந்தியாவின் புத்த வழிபாட்டிடங்கள், மடங்களி்ல் ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே பெயர்ப்பலகைகள் இருந்து வந்த நிலையில், தற்போது சாஞ்சி மடத்தில் முதன்முறையாக அனைத்து பெயர்ப்பலகைகளிலும் சிங்களம் இடம்பெற்றுள்ளது.

அண்மையில் சாஞ்சி மடத்தை பார்வையிட்ட இந்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்தியாவின் தொல்பொருள் அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனையின்படி, புதிய பெயர்ப்பலகைகள் மாற்றப்பட்டுள்ளன.

சிங்கள பெயர்ச்சொற்களின் திறப்பு வார இறுதியில் அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் முன்னிலையில் நடைபெற்றது.

இதன்போது இந்தியாவிலுள்ள அனைத்து புத்த வழிபாட்டிடங்களின் அறிவிப்பு பலகைகளிலும் சிங்கள மொழி இடம்பெறுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.