சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் பதற்றம்!



சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரிக்கு விசேட கடமைக்கு வந்திருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழு மீது மாணவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் விரிவுரையாளர்கள் காயமடைந்துள்ளனர் .

இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது .
மாணவர்களின் தாக்குதலில் மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர்கள் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில் , கல்வியாண்டு 2019 இற்கு உரிய மட்டம் – 05, 06 ஐ சேர்ந்த விவசாய டிப்பிளோமா மாணவர்களுக்கு இறுதி தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.
இதற்கு மேற்பார்வையாளராக வருகை தந்த மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளரே மாணவர்களின் தாக்குதலில் தலையில் காயங்கள் ஏற்பட்டதில் சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அத்துடன் மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த மற்றொரு விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு தலையிலும், அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு கையிலும் மாணவர்களின் தாக்குதலில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தகளேபரத்தை அடுத்து சம்மாந்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அவர்கள் சென்று பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் வைத்தியசாலைக்கு சென்ற பொலிஸார் தக்குதலில் காயம்டைந்த விரிவுரையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை தமது பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மேற்பார்வை கடமையில் ஈடுபட முடியாது இருப்பதாக தொழில்நுட்ப கல்வி திணைக்களத்துக்கு மேற்பார்வையாளர் குழு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.