ஈராக் பிரதமரின் பதவி விலகலை கொண்டாடும் மக்கள்!
பல்வேறு அழுத்தங்களின் பின்னர், ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி, தனது பதவியை ராஜினாமா செய்வதனை நாடாளுமன்றில் அறிவித்த சில நிமிடங்களிலேயே பாக்தாத்தின் தஹ்ரிர் சதுக்கத்தில் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தலைநகரில் பாடல் மற்றும் நடனம் மூலம் இந்த அறிவிப்பு, கொண்டாடப்பட்டு வரவேற்கப்பட்டாலும், சில எதிர்ப்பாளர்கள் இந்த அறிவிப்பில் சந்தேகம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டின் அரசியல் அமைப்பை முழுமையாக மாற்றுவதற்கான தங்கள் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஈராக்கில் அரசாங்கத்திற்கெதிரான கடந்த ஒரு மாதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 400ஆக உயர்ந்துள்ளது.
இதுதவிர இந்த போராட்டங்களின் போது, பொலிஸாரின் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்கு இலக்காகி சுமார் 1500இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலையின்மை, ஊழல் இதற்கு எதிராக கிளர்ந்தெழுந்த பொதுமக்கள், கடந்த ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அத்தோடு, ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தியை பதவி விலகுமாறும் கோரிக்கை விடுத்திருந்த நிலையிலேயே, அவர் தற்போது பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை