பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மிஸ் ஆன 3 பேர்!

சரவணன், மதுமிதா, மீரா மிதுன் மட்டும் மிஸ்ஸிங். சம்பள பாக்கி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் வீடியோ வெளியிட்டதால் மீரா மிதுனை பிக்பாஸ் ஒதுக்கிவைத்துவிட்டார் என்றாலும். சித்தப்புவையும், மதுமிதாவையும் ஒதுக்கியதற்கு காரணம் புரியவில்லை. இருவருமே சர்ச்சைக்குரிய வகையில் பிக்பாஸை விட்டு வெளியேறியவர்கள் என்பதால் தான் கண்டுகொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.

பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் மிஸ் ஆன 3 பேர்... ஸ்டார்ட்டிங்லையே கவினை கலாய்ச்ச கஸ்தூரி... வெறித்தனம் காட்டிய சாண்டி...!
தமிழ்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி மிகுந்த ஆராவரத்துடன் விஜய் டி.வி.யில் இன்று ஒளிபரப்பானது. ’நீயா நானா’ புகழ் கோபிநாத் பங்கேற்பாளர்களை மேடைக்கு அழைத்து, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிந்தைய நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பார்த்திமா பாபு, மோகன் வைத்யா, சேரன் உட்பட அனைவரும் தங்களை தமிழ்நாடே அறிந்து கொண்டதாகவும், நிறைய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதே கேள்வியை கஸ்தூரியை பார்த்து கோபிநாத் கேட்ட போது, எனக்கு நிறைய பொறுமை வந்திருக்கு, "யாராவது என்னை காக்கான்னு சொன்னா கூட கவலை இல்லை" என எடுத்த எடுப்பிலேயே கவினை குத்திக்காட்டி பேசினார்.


மேடையில் ஏறி அனைவரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருக்க, சரவணன், மதுமிதா, மீரா மிதுன் மட்டும் மிஸ்ஸிங். சம்பள பாக்கி குறித்தும், சக பங்கேற்பாளர்கள் குறித்தும் வீடியோ வெளியிட்டதால் மீரா மிதுனை பிக்பாஸ் ஒதுக்கிவைத்துவிட்டார் என்றாலும். சித்தப்புவையும், மதுமிதாவையும் ஒதுக்கியதற்கு காரணம் புரியவில்லை. இருவருமே சர்ச்சைக்குரிய வகையில் பிக்பாஸை விட்டு வெளியேறியவர்கள் என்பதால் தான் கண்டுகொள்ளவில்லை எனத் தோன்றுகிறது.


குடும்பத்தை மிகவும் விரும்பும் தனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தம்பி, தங்கைகள் கிடைத்துள்ளதாக மனமுருகினார் வனிதா. அதே பாணியில் தன்னை பல குடும்பத்தினர் தங்கள் வீட்டு பிள்ளையாக நினைப்பதாக தர்ஷன் கூறினார். கவினிடம் கோபி மைக்கை கொடுத்தவுடனே அரங்கத்தில் இருந்தவர்கள் ’கவின், கவின்’ என கத்த ஆரம்பித்தனர். அதைப்பார்த்த கோபி, "நான் பார்த்த கவின் வேற இங்க நிக்கிற கவின் வேற, உன்ன பார்த்தலே கொஞ்சம் பயமா இருக்குன்னு" கலாய்ச்சார். "இவங்க கத்துறதுக்கும், நீ போட்டிருக்கிற காஸ்ட்டியூம்க்கும் வேற மாதிரி இருக்குன்னாரு". அதுக்கு, "இவங்க எல்லாருக்கும் காஸ்டியூம் டிசைனர் கிடைச்சிட்டாங்க, எனக்கு கிடைக்கல, அதனால தான் வேட்டை, சட்டை போட்டுக்கிட்டு வந்தேன்னு"  ஜாலியா பதில் கொடுத்தார் கவின். சாண்டி மாஸ்டர் எப்பவும் போல அவரே ஸ்டைலுக்கு வந்து வெறித்தனம் பாட்டுக்கு ஆட்டம் போட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.