வவுனியாவில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட மாநாடு!

இன்றைய தினம் 03.11.2019 ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வவுனியாவில் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது.


வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா முதன்மை அதிதியாக கலந்துகொண்டார்.

காலை 10.30 மணியளவில் ஆரம்பமான நிகழ்வில் கொடிஏற்றலை தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் மாலை அணிவிக்கபட்டு அழைத்து வரப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் கு.திலீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், யாழ் மாநகரசபையின் முன்னாள் மேஜர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, சர்வதேச முக்கியஸ்தரான விந்தன், தேசியஅமைப்பாளர் பசுபதி சிவரத்தினம், கட்சியின் வவுனியா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், மற்றும் கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஈழமக்கள் ஜனநாயாக கட்சியின் குறித்த மாநாடு வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளதுடன் அதிகளவான பொதுமக்கள் மற்றும் ஆதரவளாரகள் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.