போராளிகளான அண்ணன் தங்கை உரையாடல்!!

நான்👉.....தொலைத்தொடர்பு கருவியில் தொடர்புகொண்டு அண்ணா நான் லீவில வீட்டபோறன் நீங்களும் வாறீங்களா என்றேன்.

அண்ணா👉...எப்ப போறாய்..?எத்தனை நாள் லீவு என்று கேட்டான்.

நான்👉...5 நாள் லீவு.வாற14 ஆம் திகதி போறன் நீங்களும் வாங்கோ அண்ணா என்றேன்.

அண்ணா👉...என்ன தங்கச்சி நல்ல மரியாதையாக கதைக்கிறாய் நீங்கள் நாங்கள் என்று,பக்கத்த ஆட்களோ என்றான் நக்கலாக

நான்👉...தெரியாதா...?அண்ணா நம்ம வண்டவாளத்தை ஏன் வெளிய காட்டிக்கொடுப்பான் என்றுதான் என்று இழுத்தேன்

அண்ணா👉...வருவன் போன முறை எனக்கு விட்ட திருகுதாளம் போல இந்த முறையும் விடமாட்டாய்தானே.இல்லாட்டி நான் தனிய போறன் வீட்ட என்றான்.

நான்👉...என்னண்ணா இப்படி சொல்லுறாய். என்னில அவ்வளவுக்கு நம்பிக்கை இல்லையா உனக்கு..?உன்னைக் கொண்டு சத்தியம் பண்ணவா என்றேன்

அண்ணா👉... வேண்டாம்விடு என்றவன் மூன்று நாட்களின்பின் முகாமில் இருந்து லீவில் வீட்டிற்கு வந்துசேர்ந்தான்,

அம்மா👉...பிள்ள 5 நாள் லீவும் முடிஞ்சுது, இந்த முறை கூடுதலாகத்தான் பலகாரம் செய்து புறம்பு புறம்பாக அண்ணாக்கும் உனக்கும் கட்டி வச்சிருக்கிறன்,போனமுறைபோல அண்ணான்ர பலகாரங்களையும் அள்ளிக்கொண்டு போடாத என்றா(மானம்போக 🤣🤣🤣)

நான்👉...ஓம் அம்மா,ஆனால் அவன்ர முகாமில கொஞ்ச பெடியள், என்ர முகாமில நிறைய பேர் அம்மா,பெட்டையள் உந்த பயித்தம் உறுண்டைக்குத்தான் சொல்லிவிட்டவளே,எனக்கு கொஞ்சம் கூடுதலாக கட்டிவையுங்கோ என்றேன்,

அண்ணா👉...ஏன்ரி உன்ர பெட்டையளுக்குத்தான் வாய் இருக்கு என்ர பெடியளுக்கு வாய் இல்லையோ.?அம்மா சரி சமனாகத்தான் பங்கிடவேணும் என்று சண்டைபோட்டான்,

நான்👉...அண்ணா சரிவாடா சைக்கில்ல கொண்டுபோய் என்ன றோட்டில விட்டுவிடு, எங்கட வளங்கள் வாகனம் வரும் அதிலஏறி  போறன் நான் என்றேன்,

அம்மா👉...பிள்ளை பலகாரபை. சீப்பு.பிறஸ்.சோப்கேஸ்.உடுப்பு எல்லாம் எடுத்திட்டாய்தானே என்றா

நான்👉...ஓம் அம்மா எடுத்திட்டன். போட்டுவாறன் என்றிட்டு புறப்பட்டன்.

அண்ணா👉...அடியேய் தடிமாடு மாதிரி இருக்காம சைக்கில் வறல்கட்டையில காலவச்சு நீயும் மிதிச்சுக்கொண்டு வாவன் என்று பேசிக்கொண்டு வந்தான்.

நான்👉...அண்ணா உங்கட வேசில எத்தனை பேரடா என்றேன்,அதேன் உனக்கு அதெல்லாம் சொல்லேலாது என்றவன் றோட்டில கொண்டு வந்து இறக்கிவிட்டான்,

மாலைநேரம்

அண்ணா..👉தங்கச்சி அம்மா அரியதரம் சுட்டவாதானே.,?இங்க முகாமுக்கு வந்து பார்த்தன் காணேல,அம்மா எனக்கு வைக்க மறந்துபோனாபோல என்றான்.

நான்..👉அம்மா மறக்கேலயடா நான்தான் தூக்கிக்கொண்டு வந்திட்டன் பேசாதயடா அண்ணா,உன்ர எல்லா பலகாரத்திலயும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எடுப்பம் என்று பார்த்தன்.அம்மா திடீரென்றுவர பயத்தில அவிட்ட பையை அப்படியே தூக்கி என்ர வாக்கில வச்சிட்டன்.பிறகு உன்ர வாக்கில வைக்கேலாம போச்சுது,பிளீசடா பேசாத,இனி அப்படி செய்ய மாட்டன் என்றேன்.

அண்ணா...👉என்னடி  பழக்கம் உனக்கு,இனி நீ லீவில போகேக்க நான் வரமாட்டன் என்றான்,

நான்..👉 சரி வராட்டிவிடு பறவாயில்ல. சண்டையில நான் வீரச்சாவு என்றால்  பிறகு நீ அழேக்கதான் தெரியும் என்றேன்.

சும்மா சென்டிமன்ட்டா கதைக்க பயபுள்ள பயந்திட்டான்.

அண்ணா..👉சரி விடு இப்படி கதைக்காத,அடுத்த முறையாவது என்ர பலகாரத்தை எடுக்காத என்றான்.

நான்...👉சரி அண்ணா நீயும் உப்புடி சின்னபுள்ள தனமா கெஞ்சாத,உண்மையா இனி உன்ர பலகாரத்தை எடுக்க மாட்டன். அடுத்தமுறை லீவில வீட்ட போகேக்க சொல்றன் வா என்றேன்,

(நம்ம மயின்ட் வொய்ஸ்.....)என்ர முகாம் வானரசு படைகளிற்காக அடுத்த முறையும் உன்ர பலகாரத்தை நான் சுடத்தான்டா போறன் அண்ணா,ஏலுமென்றா என்னை நீ பிடிச்சுப்பார்.

ஒருசில கற்பனைகளோடு...

**பிரபாஅன்பு**
Powered by Blogger.