ஊரடங்கு உத்தரவையும் ஈராக்கில் தொடர் போராட்டம்!

ஈராக்கில் ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில் குறித்த போராட்டத்தில் பொலிஸார் தலையிடாத நிலையில் தலைநகர் பக்தாத்தின் முக்கிய சந்திகளில் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்தி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தியும் அரச பணியாளர்கள் அலுவலகங்களை மூடியும் போராட்டத்தில் ஈடுட்டிருந்தனர்.

வேலைவாய்ப்புக்களை கோரியும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், மக்களுக்கு அரசாங்க சேவைகளை சிறந்த முறையில் வழங்குமாறும் கோரி கடந்த ஒரு மாத காலமாக ஈராக்கில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த போராட்டங்களில் மக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.