25 வார்டுகளை புனரமைத்து 25 வருட பூர்த்தி!

தமது சமூகத்திற்கு எப்போதும் மீள் உபகாரம் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ள பெஷன் பக் நிறுவனம், அண்மையில் மாத்தறையிலுள்ள மாவட்ட வைத்தியசாலையின் 25 வார்டுகளை புனரமைத்து அதன் 25 வது வருடப் பூர்த்தியைக் கொண்டாடியது.


வைத்தியசாலையின் நிர்வாக சபையின் வேண்டுகோளுக்கு அமைய இந்த வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பெஷன் பக் நிறுவனத்தின் ஊழியர்கள், வைத்தியசாலையை புனர் நிர்மாணம் செய்வதிலும், வர்ணம் பூசுவதிலும் ஆர்வம் காட்டியிருந்தனர்.

பல்வேறு முக்கிய தேவைப்பாடுகளான மெத்தைகள், தலையணைகள், சக்கர நாற்காலிகள், கபட்கள் மற்றும் ட்ரொலிகள் போன்ற வைத்தியசாலை உபகரணங்களும் இதன் போது கையளிக்கப்பட்டன.

இந்த விடயம் பற்றி பெஷன் பக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சபீர் சுபியான் கருத்து வெளியிடுகையில், "பெஷன் பக் நிறுவனம், மாத்தறையை ஒரு முக்கிய நகரமாகக் கருதுகிறது.

நகரின் மிகப் பெரிய விற்பனை நிலையங்களில் பெஷன் பக் நிறுவனமும் ஒன்றாகும். சகல சமூக மட்டங்களையும் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் கொண்டு இந்தக் கிளை செயற்பட்டு வருகிறது.

மாத்தறை ஆதார வைத்தியசாலையானது, சகலருக்கு எவ்வித பாகுபாடுமின்றி சம அளவில் சேவையாற்றி வரும் ஒரு அரச நிறுவனமாகும். அதில் எமது வாடிக்கையாளர்களும் சேவை பெற்று வருகின்றனர்.

எனவே, எமது இந்த வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒரு வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் அரச நிறுவனங்களோடு ஒன்றிணைந்து செயற்படுவது மிக முக்கியமாகும்" என்று கூறினார்.

இந்தத் தொழிற்துறையில் 25 வருடங்களைப் பூர்த்தி செய்யும் பெஷன் பக் நிறுவனம், நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் 25 வது வாட்டினை புனரமைத்துக் கொடுக்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.