ஜக்கிய தேசியக்கட்சியும் ஒரு கொலைகார கட்சிதான்!

ஜக்கியதேசியகட்சி ஒன்றும் தமிழர்கள் மீது அன்பான கட்சியோ பாசமான கட்சியோ இல்லை அதுவும் ஒரு கொலைகார கட்சிதான்  ஜக்கியதேசிய கட்சி ஆட்சியில் இருந்தால் அபிவிருத்தியும் இல்லை அரசியல் தீர்வும் இல்லை. என ன்னாள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சர் வரதராஜப்பொருமாள் தெரிவித்தார்.



முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட வரதராஜப்பொருமாள் முல்லைத்தீவு மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜயபெரமுன கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை இன்று  நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினமும் கலந்துகொண்டுள்ளார்

இந்த ஊடக சந்திப்பில் தமிழர் சமூகஜனநாயக கட்சியின் சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்மக்கள் தாமரை மொட்டு சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோன்.

இது தொடர்பில் நண்பர்களையும் தோழர்களையும் மக்கள் பிரதிநிதி நிதிகளையும் முல்லைத்தீவில் சந்தித்து கலந்துரையாடி வருகின்றேன்.

முல்லைத்தீவினை பொறுத்தவரையில் இறுதி போரில் பெரும் அழிவுகளை சந்தித்த பிரதேசம் இந்த மக்கள் பல இழப்பக்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளானவர்கள் போர் முடிந்து பத்து ஆண்டுகளாகியும் இந்த மக்கள் பல்வேறு வகையில் பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் பின்தங்கியவர்களாக புறக்கணிக்கப்பட்டவர்களாக பாராபட்சத்திற்கு உள்ளனாவர்களாக இருந்து வருகின்றார்கள்

பல்லாயிரக்கணக்கான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருக்கின்றன அவர்கள் சரியான முறையில் கௌரவமாக சுயாதீனமாக வாழமுடியாத நிலையில் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப்பகுதியில் உள்ள விவசாயம் பல்வேறு காரணங்களுக்காக முன்னேற்றம் இல்லாமல் இருக்கின்றன.

1970 ஆம் ஆண்டுகளில் இருந்த நிலமைதான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் மேலதிகமாக செய்யப்படவேண்டும்.

போர்முடிந்தவுடன் ராஜபக்ஷ தலைமையில் இருந்த ஆட்சி மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு மேலாக அதற்கு பிறகு கடந்த ஜந்து ஆண்டுகளாக ஜக்கியதேசிய கட்சியின் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை அதற்கு அதனை தாங்கிக்கொண்டிருக்கின்ற தமிழ்தேசியக்கூட்டமைப்பு முல்லைத்தீவு மாவட்டத்தினை புறக்கணித்த நிலையிலேயே இங்கு வருகின்ற பொழுதெல்லாம் முழக்கங்களையும் வீரவசனங்களையும் பேசுகின்றார்களே மக்களின் வாழ்வில் முன்னேற்றத்தினை ஏற்படுத்துகின்ற எந்த வேலையினையும் செய்யவில்லை

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னேற்றத்திற்காக அவர்கள் எதனையும் செய்யவில்லை மாறாக இங்கு நடக்கக்கூடிய சில அரசாங்க வேலைகளில் எப்படி தாங்கள் கொன்றாக்கினை எடுத்து அதில் உழைத்துக்கொள்ளலாம் அதனுடன் ஜக்கியதேசியக்கட்சியினை காப்பாற்றுவதில் எப்படி தங்கள் பிளைப்புக்களை மேற்கொள்ளலாம் என்பதில் அக்கறையாக இருக்கின்றார்கள்.

தமிழ்தேசியக்கூட்டமைப்பினை பொறுத்தவரையில் அது இன்று ஜக்கியதேசியக்கட்சியின் பகுதிக்கட்சியாக போய்விட்டது.

ஜக்கியதேசியக கட்சியே தமிழரசு கட்சியை காப்பாற்றுகின்றது தமிழரசு கட்சியே ஜக்கியதேசியகட்சியினை காப்பாற்றுகின்றது  எனவே தமிழரசு கட்சி என்பது 1980ற்கு முன்னர் இருந்த தமிழரசு கட்சியினை முடித்துவிட்டார்கள்.

இப்போது இருப்பதெல்லாம் ஜக்கியதேசியகட்சியின் கிழையாக இருக்கக்கூடிய ஜக்கியதேசியக்கட்சியே தமிழரசு கட்சி என்று தான் சொல்லவேண்டுமே தவிர தமிழரசு கட்சி என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது

தமிழரசு கட்சியின் உண்மையான தலைமைவர் ரணில் விக்கிரமசிங்க என்றுதான் சொல்லவேண்டும் அவர் சொல்கின்றபடி ஆழுகின்ற நிலமைதான் இன்று இருக்கின்றது.

இவர்கள் ஆதரிக்கின்ற சஜித் பிரேமதச தமிழர்களுக்கு என்ன அனியாங்களை கொடூரங்களை எல்லாம் களத்திலே நின்று செய்தாரோ சரத்பொன்சேகாவைபாதுகாப்பு அமைச்சராக்கபோகிறாராம்

சஜித் பிரேமதச அமைச்சின் கீழ் தொல்பொருள் திணைக்களம் இருக்கின்றது அந்த திணைக்களம் தான் முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த விரிவாக்கத்தினை செய்கின்றது. திருகோணமலை கன்னியாவில் பௌத்த விரிவாகத்தினை செய்கின்றது.

சஜித்பிரேமதசா தான் ஜனாதிபதியானால் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகள் கட்டுவேன் என்று பிரகடனப்படுத்துகின்றார்.

எனவே இவ்வாறான சிங்கள பௌத்த தேசிய இனவெறியர்களாகத்தான் ஜக்கியதேசியக்கட்சி இருக்கின்றது அந்த இனவெறியினை தூண்டி சிங்கள மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளலாம் என நினைக்கின்றார்கள்.

தமிழ்மக்களுக்கு ஒரு வார்த்தையும் சிங்களமக்களுக்கு இன்னொரு வார்த்தையும் சொல்லப்படுகின்றது தமிழ்மக்களுக்கு அதிகாரத்தினை தருவேன் என்று சொல்கின்றார்கள் சிங்கள மக்கள் மத்தியில் தாங்கள்தான் தமிழ்மக்களின் போராட்டத்தினை அழித்துஒளித்ததாக தெற்கில் பொய் சொல்கின்றார்கள்

எனவே இவ்வாறான ஜக்கியதேசிய கட்சி கடந்த ஜந்து ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதனையும் கொடுக்கவில்லை அரசியல் தீர்வினை அள்ளித்தருவேன் என்று சொன்னவர்கள் எதனையும் கொடுக்கவில்லை கடைசியில் இடைக்கால அறிக்கை என்று சொல்லி ஏட்டுச்சுரக்காயினை தவிர வேறுஎதுவும் தமிழர்களுக்கு கிடைக்கவில்லை

தமிழர்கள் ஏமாந்து விடாமல் இந்தமுறை ஒரு மாற்றத்தினை கொண்டுவரவேண்டும் ராஜபக்ஷவின் ஆட்சியினை பொறுத்த வரையில் அவர்கள் அபிவிருத்தியில் நிபுணர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும் சிங்கள மக்களும் தமிழ்மக்களும் அதனை ஒத்துக்கொள்வார்கள்.

இன்று தமிழர்கள் மத்தியில் அபிவிருத்தி என்பது மிக பிரதானமாக இருக்கின்றது இதில் கவனம் செலுத்தி தமிழ் சமுதாயத்தினை முன்னணிக்கு கொண்டுவரவேண்டிய நிலையில் இருக்கின்றோம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் சிறுபான்மையினராகின்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

யார் அரசாங்கம் வந்தாலும் அந்த அரசாங்கத்தின் அமைச்சர்களாக இருந்து முஸ்லீம் தலைவர்கள் அவர்களின் இனத்திற்கு வேண்டியவற்றை செய்கின்றார்கள் ஆனால் தமிழர்களுக்கு செய்வதற்கு அமைச்சோ அரசாங்கமோ அதிகாரித்தில் பங்கெடுப்பவர்கள் இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றது அதுவும் ஜக்கியதேசியக்கட்சி ஆட்சியில் தமிழர்களுக்கு முகவர்கள்தான் இருக்கின்றார்கள் தமிழர்களை உரிமையுடன் கவனிக்கின்ற அவர்கள் பிரச்சனையினை பாக்கின்ற பாராளுமன்ற பிரதிநிதிகளோ அமைச்சர்களோ இல்லை.

ஜக்கியதேசியக்கட்சி அரசாங்கம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரைக்கும் 25 ஆண்டுகளுக்கு மேலாக அழிவை தந்தது வடக்கு கிழக்கு மாகாணசபையினை அழித்த ரணசிங்க பிரேமதசாவினுடைய மகன்தான் சஜித்பிரேமதாசா தந்தையின் ஆட்சியில் தென்னிலங்கையில் அறுவதாயிரம் இளைஞர்களை கொன்றார்கள் வடக்கு கிழக்கிலும் தமிழர்களை அழித்தார்கள்.

ஜக்கியதேசியகட்சி ஒன்றும் தமிழர்கள்மீது அன்பான கட்சியோ பாசமான கட்சியோ இல்லை அதுவும் ஒரு கொலைகார கட்சிதான்  ஜக்கியதேசிய கட்சி ஆட்சியில் இருந்தால் அபிவிருத்தியும் இல்லை அரசியல்தீர்வும் இல்லை ராஜபக்ஷக்கள் ஆட்சியில் இருந்தால் அபிவிருத்திநடக்கும் அரசியல் தீர்வு கொஞ்சம் கொஞ்சமாவது முன்னேற்றம் நடக்கும்.

சிங்கள மக்கள் மத்தியில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்ற ஒருவர்தான் மிகப்பெரும்பான்மையாளவில் சிங்கள மக்கள் வாக்களிக்கப்போகின்றார்கள் கோத்தாபய ஜனாதிபதியாக வருவதில் எந்த சந்தேகமும் இல்லை தமிழர்களின் பங்களிப்பு என்ன என்பது இந்த நாட்டில் வரப்போகும் ஜனாதிபதி சிங்கள மக்களால் மட்டும் உருவாக்கப்பட்ட ஜனாதிபதியாக இருக்கக்கூடாது

தமிழர்களின் ஜனாதிபதியாகவும் இருக்கவேண்டும் அதுதான் ராஜபக்ஷக்களின் விருப்பமும் தமிழ்மக்களின் வாக்குகள் தங்களுக்கு தேவை என்று அவர்கள் எல்லாவகையிலும் முயற்சிக்கின்றார்கள் தமிழ்மக்கள் கோத்தாபயவுக்கு வாக்குகளை அளிக்கின்ற பொழுதுதான் ஜனாதிபதியாக வருபவரிடம் இருந்து தமிழர்கள் எதனையும் பெற்றுக்கொள்ளமுடியும் தோற்கும் ஒருவருக்கு வாக்களித்து தமிழர்கள் தோல்விகளை சந்திக்கக்கூடாது வெல்பவர்கள் ஊடாக சென்று தமிழர்கள் வெற்றியினை சாதிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.