தேர்தல் பிர­சாரக் களத்தில் இறங்கிய ஜலனி பிரே­ம­தாஸ!!

வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­களில் நேற்­றைய தினம் மகளிர் ஒன்­று­கூடல் நிகழ்­வு­களில் அவர் கலந்­து­கொண்டார். இந்த நிகழ்­வு­களில் இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன், கொழும்பு மாந­கர மேயர் ரோஸி சேன­நா­யக்க உட்­பட பலரும் கலந்­து­கொண்­டனர்.


ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் ஆலோ­ச­னையின் பேரில் வட­மா­கா­ணத்தில் நேற்றும் இன்றும்  மகளிர் அணி மாநா­டுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. வவு­னி­யாவில் மகளீர் ஒன்று கூடல் நிகழ்வு நேற்­றைய தினம் தனியார் விடு­தி­யொன்றில் நடை­பெற்­றது. இதே­போன்றே மன்னார், முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளிலும் மாநா­டுகள் இடம்­பெற்­றன.
இந்தக் கூட்­டங்­களில் பெண்கள் அமைப்பின் தலை­விகள், கிராம மடட்ட அமைப்­புக்­களின் உறுப்­பி­னர்கள், பெண்­களைத் தலை­மைத்­து­வ­மாகக் கொண்ட குடும்பத் தலை­விகள் மற்றும் பெரு­ம­ள­வான பெண்கள் கலந்­து­கொண்­டனர். பெண்­க­ளுக்­கான பல நலத்­திட்­டங்கள் தொடர்­பாக வாக்­கு­று­தி­களும் இந்தக் கூட்­டங்­களில் வழங்­கப்­பட்­டன.

வவு­னி­யாவில் நடை­பெற்ற மாநாட்டில் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் பாரியார் ஜலனி பிரே­ம­தாச, ரோசி சேனா­நா­யக்க, இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன், வவு­னியா நக­ர­சபை உறுப்­பினர் ஏ.ஆர்.எம்.லரிப், அப்­துள்­பாரி, முன்னாள் வட­மா­காண சபை உறுப்­பினர் றிப்கான் பதீ­யுதீன், முத்து முக­மது உட்­பட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் ஜலனி பிரேமதாச கலந்துகொள்ளும் மகளிர் அணி மாநாடுகள் இடம்பெறவுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.