தர்பாரில் கமல்!!

ரஜினிகாந்த் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் நாளை வெளிவர இருக்கிறது.

தர்பார் பட வெளியீடு சம்பந்தமான ஒவ்வொரு நகர்வையும் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்லத் திட்டமிட்டிருக்கும் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடுவதில் முத்தாய்ப்பாக மூன்று பேரை சேர்த்திருக்கிறார்.
இன்று (நவம்பர் 6) மாலை தனது ட்விட்டரில் தர்பார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், “தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை நாளை(நவம்பர் 7) இந்திய சினிமாவின் முக்கியப் புள்ளிகள் வெளியிடுகிறார்கள். தமிழில் கமல்ஹாசன், இந்தியில் சல்மான்கான், மலையாளத்தில் மோகன்லால் என முப்பெரும் பிரமுகர்கள் வெளியிட இருக்கிறார்கள். தலைவரை மோஷன் போஸ்டரில் பார்க்கவும், அனிருத்தின் தீம் மியூசிக்கை கேட்கவும் தயாராகுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார் முருகதாஸ்.
இதன் மூலம் தர்பார் படத்தின் அடுத்த கட்ட சுவாரஸ்யம் அரங்கேறுகிறது. ரஜினிகாந்தின் 167 ஆவது படமாக வெளிவரும் தர்பாரில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மூன்றுமுகம், பாண்டியன் படங்களைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தில் நயன் தாரா நாயகியாக நடிக்கின்றார். மேலும் இப்படத்தில் பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் எனப் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தளபதி படத்திற்குப் பின் ரஜினிகாந்த் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.