ரோஹித் அதிரடி: இந்தியா வெற்றி!
ராஜ்கோட்டில் நேற்று(நவம்பர் 7) நடந்த இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
டெல்லியில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், வங்கதேசத்திடம் அடைந்த தோல்விக்குப் பின் இந்தியா தனது இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இருந்தது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது.
154 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. ரோஹித், தவான் களமிறங்கினர். துவக்கத்தில் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது இந்திய அணி. அதன் பின்னர் வங்கதேச அணியின் பவுலிங்கை நாலாபுறமும் சிதறடிக்கத்துவங்கினார் ரோஹித் ஷர்மா. அதிரடியாக அரைசதம் விளாசிய ரோஹித், 10ஆவது ஓவர் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். 43 பந்துகளில் 85 ரன்கள் விளாசிய ரோஹித், இஸ்லாம் ஓவரில் கேட்ச்சானர். அதன் பின்னர் களமிறங்கிய ஐயர் 23 பந்தில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி அடித்து அசத்தினார்.
முடிவில் இந்தியா 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்து 154 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்கதேசம், இந்திய அணி தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. ஆட்டநாயகன் விருதை ரோஹித் சர்மா பெற்றார்.
கருத்துகள் இல்லை