எங்கள் சட்டத்தரணிகளும், சிவில் அமைப்புக்களும் சட்டத்தரணி குருபரனை கைவிட்டு விட கூடாது!!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னால் துணேவேந்தர் இ.விக்னேஷ்வரனை கைவிட்டது போன்று எங்கள் சட்டத்தரணிகளும், சிவில் அமைப்புக்களும் சட்டத்தரணி குருபரனை கைவிட்டு விட கூடாது.

இது குருபரனுக்கான ஆதரவு மட்டுமல்ல, அரச பணிகளில் இருந்துகொண்டு தமிழ்த்தேசியத்துக்கு தங்களால் இயன்றவற்றை பலர் செய்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் பணியில் இருந்து ஒதுங்கிவிடாமல் காட்டும் ஆதரவாக இருக்க வேண்டும்.
குருபரன் நாவற்குழி காணாமல் போனோர் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் இலக்கு வைக்கப்பட்டவர். அதன் தொடர்ச்சியாக தற்போது பல்கலைக்கழக மானியங்கள் ஊடாக இராணுவத்தால் பழி வாங்கப்பட்டுள்ளார்.
இதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுதான் முன்னால் துணைவேந்தர் விக்னேஷ்வரனை பதவி நீக்கம் செய்தது. இதற்கு பின்னணியிலும் இராணுவம் தான் இருந்தது. காரணம் பல்கலைக்கழக வாழகத்தினுள் மாணாவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை கண்டுக்காமல் விட்டமை, மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட நினைவு தினங்களில் விழக்கேற்றியமை என பல.
ஆனால் மாணவர்கள் அவருக்காக போராடவில்லை, மௌனமாக இருந்துவிட்டனர். இதே தவறை நாங்களும் விட்டுவிட கூடாது. தமிழ்த்தேசியத்துக்கா அர்ப்ணிப்புடன் செயற்படுபவர்கள் அரச இயந்திரத்தால் நசுக்கப்படும் நேரங்களில் போராடாவிட்டால் தமிழ் தேசியம் உயிர்ப்புடன் இருக்காது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.