ஐஸ் இளவரசியாக ஸ்ருதிஹாசன்!

https://www.tamilarul.net/
டிஸ்னியின் உருவாக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ஃப்ரோசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸுக்குத் தயாராகிவருகிறது. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்தில், இளவரசி எல்சாவின் கேரக்டருக்கு குரல் கொடுத்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

"ஃப்ரோசன் திரைப்படத்தில் எல்சா மற்றும் ஆனா சகோதரிகளுக்கிடையிலான பந்தம் உள்ளத்தை உருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. எல்ஸா தன் இளைய சகோதரி மீது கொண்ட பேரன்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காரணம் நானும் என் இளைய சகோத ரிமீது அந்த அளவுக்கு பாசம் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் ரோல் மாடல் எல்ஸா என்பதும், நான் அந்தப் பாத்திரத்துக்கு குரல் கொடுத்து பாடியிருப்பதும் என்னால் மறக்க முடியாத அனுபவம். பரபரப்பான இந்த அனிமேஷன் திரைப்படத்தில் பாடல்கள், படத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவதுடன் எனது தமிழ் பட ரசிகர்களையும் வெகுவாகக் கவரும்" என்றார்.
https://www.tamilarul.net/
தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவிருக்கும் படம்தான் 'ஃப்ரோசன் 2'. புதிரான கதைக்கரு, மறக்க முடியாத கதாபாத்திரங்கள் மற்றும் எல்சா -ஆனா ஆகியோரின் சாகசங்களால் ஈர்க்கப்படுவார்கள்.
இது மட்டுமின்றி இன்னும் சில சிறப்பம்சங்களும் இப்படத்துக்கு உண்டு '.ஃபோரஸன் 2' படத்தின் இந்திப் பதிப்புக்காக பிரியங்கா சோப்ரா மற்றும் ப்ரனிதி சோப்ரா குரல் கொடுக்க, தெலுங்கு பதிப்புக்காக நித்யா மேனன் குரல் கொடுத்திருக்கிறார். ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நவம்பர் 22ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.