பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் நினைவு வணக்க நிகழ்வு-யேர்மனி!📷
யேர்மனி போகும் நகரில் இன்று 02.11.2019 பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் மற்றும் அவரோடு வீரச்சாவை தழுவிய ஆறு மாவீரர்களினதும்பன்னிரன்டாம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு மிகவும் எழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.
இவ்வணக்க நிகழ்வில் பொதுஈகச்சுடர் ஏற்றிவைக்க தொடர்ந்து தமிழீழ ஒருங்கினைப்பு குழு தாயக நலன் செயல்ப்பாட்டாளர் திரு.ராஜன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் உருவபடத்திற்க்கு மலர்மாலை சாத்தி மாவீரர் திருவுருவப் படங்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு யேர்மனியின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வருகை தந்த தமிழீழ உறவுகள் சுடர்வணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தினார்கள்.
இவ்வெழுச்சி நிகழ்வில் எழுச்சிப்பாடல்கள் மண்டபம் நிறைந்திருந்த தமிழீழ மக்களின் மனங்களில் விடுதலை வேட்கையினை உணர்வுகளோடு ஊட்டியிருந்தன. தொடர்ந்து பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வேங்கைகளின் நினைவுரை வழங்கினர்.
இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த மதிற்புக்குரிய தமிழீழ ஒருங்கினைப்பு குழு தாயக நலன் செயல்ப்பாட்டாளர் திரு.ராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார். இவ்வுரையில் தமிழர்களாகிய நாம் எல்லோரும் தூய்மையோடு மாவீரர்களை மனங்களில் நிறுத்தி அவர்கள் விட்ட பணியினை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனறு கூறினார்.
மேலும் தெரிவிக்கையில்
யேர்மனியில் உருவாக்கப்படட அரசியல் சார்ந்த விடயங்கள் அவசியம் பற்றியும் அதனோடு அனைத்து தமிழர்களும் ஒரு குரலாக சிறிலங்காவின் இனப்படுகொலையினையும் போர்க்குற்றத்தினையும் அனைத்துலக சமூகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று தெரிவித்திருந்தார். குறிப்பாக அடுத்தவர்களை குறை கூறாது ஒற்றுமையோடு நாம் எல்லோரும் தலைவரின் இலட்சியத்தினை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்வின் இடையே யேர்மனி தமிழ்மாணவிகளின் எழுச்சி நடனங்களும் உரைவணக்கமும் இடம்பெற்றன.
பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவெழுச்சி நிகழ்வின் இறுதியில் தேசிய கொடி இறக்கப்பட்டு நம்புங்கள் தமிழீழம் என்ற பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தினை எழுச்சியோடு ஒலித்த மக்களின் உணர்வுகளோடு நிறைவுபெற்றது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை