சந்திரயான் -2 முடிவல்ல: இஸ்ரோ சிவன்!
இஸ்ரோ தலைவர் சிவன் நேற்று (நவம்பர் 2) டெல்லி ஐஐடியில் நடைபெற்ற 50ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், சந்திரயான் 2 திட்டத்தில், லேண்டரின் மென்மையான தரையிறக்கத்தை நிறைவு செய்வதில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை, ஆனால் பணியின் அனைத்து அமைப்புகளும் நிலாவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 300 மீட்டர் வரை சிறப்பாகச் செயல்பட்டன. தோல்விகள் இருந்தபோதிலும், இஸ்ரோ வெற்றி பெற விரும்புகிறது. சந்திரயான் -2 கதையின் முடிவு அல்ல. எதிர்காலத்தில் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிப்பதற்கு இஸ்ரோ தனது அனுபவம், அறிவு மற்றும் தொழில்நுட்ப வலிமை அனைத்தையும் பயன்படுத்தும் என்று உறுதியளிக்கிறேன்.
விக்ரம் லேண்டரை நிலாவில் தரையிறக்க முயற்சித்ததில் இருந்து சில போதுமான தகவல்களைச் சேகரித்துள்ளோம். அதன் மூலம் தவறுகளைச் சரி செய்து எதிர்காலத்தில் நிலாவின் மற்றொரு பாதியில் தரையிறங்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
”தற்போதைய சூழலில் ஆதித்யா L1 சோலார் மிஷன், மனித விண்வெளி பயணம் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்த முயன்று வருகிறோம். வரவிருக்கும் மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான செயற்கைக்கோளை ஏவத் திட்டமிடப்பட்டுள்ளன ”என்றும் சிவன் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை