தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள்.!!

1000 நாட்களாக தாயகத்தில் நடைபெறும் உறவுகளின் போராட்டத்திற்க்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெற்ற
கவனயீர்ப்பு நிகழ்வுகள். தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டம் 1000 நாட்கள் எட்டியதையொட்டி அதற்கு வலுச்சேர்க்கும் முகமாக யேர்மன் நாட்டில் பல்வேறு நகரங்களில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இவ் நிகழ்வுகளில் செயற்பாட்டாளர்கள் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிழற்படங்களை தாங்கியவாறு பல்லின சமூகத்திடம் நீதிகோரியதோடு , துண்டுப்பிரசுரங்களையும் வழங்கினார்கள்.அத்தோடு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வகையில் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கும் மனு அனுப்பிவைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.