ஐ.எஸ்.எல்., கால்பந்து: ஒடிசா வெற்றி!
ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் அசத்திய ஒடிசா அணி 4–1 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 6வது சீசன் நடக்கிறது. மும்பையில் நடந்த லீக் போட்டியில் மும்பை, ஒடிசா அணிகள் மோதின. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜிஸ்கோ ஹெர்னாண்டஸ் முதல் கோல் அடித்தார்.
தொடர்ந்து அசத்திய ஒடிசா அணிக்கு 21வது நிமிடத்தில் ஜெர்ரி ‘பாஸ்’ செய்த பந்தில் அரிடேன் சான்டனா ஒரு கோலடித்தார். பின் 41வது நிமிடத்தில் ஒடிசா அணியின் சுபம் சாரங்கி ‘பாஸ்’ செய்த பந்தை நந்தகுமார் சேகர் துாக்கி அடித்தார். பந்து ‘கோல் போஸ்ட்டில்’ பட்டு திரும்பியது. அப்போது அருகில் நின்ற மற்றொரு ஒடிசா வீரர் ஜெர்ரி, பந்தை கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவில் மும்பை அணி 0–3 என, பின்தங்கி இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட மும்பை அணிக்கு 51வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் முகமது லார்பி முதல் கோல் அடித்தார். இது, ஐ.எஸ்.எல்., வரலாற்றில் மும்பை அணியின் 100வது கோலானது. இந்நிலையில் 73வது நிமிடத்தில் ஒடிசா அணியின் ஜெர்ரி துாக்கி அடித்த பந்தை அரிடேன் சான்டனா தலையால் முட்டி கோலடித்தார். தொடர்ந்து போராடிய மும்பை அணிக்கு ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+5வது) பிபின் ஒரு கோலடித்து ஆறுதல் தந்தார்.
ஆட்டநேர முடிவில் ஒடிசா அணி 4–2 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை