கஞ்சிக்குடிச்சாறு மாவீரர் துயிலுமில்ல துப்பரவு பணிகளில் ஈடுபட்டவர்களை அச்சுறுத்திய இராணுவத்தினர்.!!

தமிழ்த் தேசசிய மாவீரர் நாளினை நினைவுகூறுவதற்கான முன்னேற்பாடாக அம்பாறை மாவட்டம் கஞ்சிச்குடிசாறு மாவீரர் துயிலும் இல்லம் இன்று வெள்ளிக்கிழமை (8) காலை முதல்   சிரமதான பணிகள் இடம்பெற்றது . இதன்போது அங்கு வந்த சிறீலங்கா இராணுவத்தினர் மாவீரர் துயிலும் இல்ல துப்பரவு பணிகளின் போது தடுத்து நிறுத்துமாறு கோரினர் இல்லையேல் கைது  செய்ய நேரிடும் என மாவீரர் குடும்பங்களை அச்சுறுத்தி சென்றனர்.

கார்த்திகை 27 மாவீரர் தின நிகழ்வுகளை முன்னேற்பாடுகள் முன்னிட்டு சிரமதானப் பணிகள் தாயகப் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்ல மீள்நிர்மாணிப்பு குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை கஞ்சிகுடிச்சாறு ,மட்டக்களப்பு மாவடி முன்மாரி, தாண்டியடி ,வாகரை கண்டலடி திருமலை ஆலங்குளம்,செம்மலை உள்ளிட்ட 7 மாவீரர் துயிலும் இல்லங்களும் சிரமதானப் பணிகளை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தனர்.

அம்பாறை கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்ல மீள்நிர்மானிப்பு  குழுவின் தலைவரான குட்டிமணி மாஸ்டர் என்று அழைக்கபடும் நாகமணி கிருஷ்ணபிள்ளை  கூறுகையில்

கார்த்திகை 27 தாயக விடுதலைக்காக ஆகுதியான மாவீர செல்வங்களை நினைவுகூரும் முகமாக இவ் முன்னேற்பாடுகள் இவ் வருடமும் உணர்வுபூர்வமாக நினைவுகூர இருப்பதனால் இன்று சிரமதான பணிகளை முன்கொண்டு செல்கிறோம். ஆனால் இராணுவத் தரப்பு அங்கு வந்து சிரமதான பணிகளை இடை நிறுத்த கோரியதாகவும் இல்லையேல் கைது செய்து கொண்டு செல்ல நேரிடும் என அச்சுறுத்தி சென்றனர். 

அதன் பின்னர் இரண்டாவது தடவையாக அதே இராணுவத்தினர் சிரமதான பணியினை மேற்கொள்ளும் அனைவரையும் புகைபடம் எடுக்க வேண்டும் அத்தோடு தங்களது சுய விபரத்தையும் வழங்குமாறு கோரினர். இதனை மறுத்த பின்னர் இவற்றை பதிவு செய்த ஊடகவியலாளரின் அடையாள அட்டையை பரிசோதனை செய்த பின்னர் அடையாள அட்டையை புகைப்படம் எடுத்த பின்னர்  அங்கிருந்து அகன்று சென்றனர்.

 தமிழர் தாயக பிரதேசங்களில் கார்திகை 27  புனித நாளாகவும் அன்று  மாவீரர்களை வணங்க இந்த அரசும் இராணுவத்தினரும் தடுத்து வருவது சனனாயகத்திற்கு விரோதமானது. சர்வதேசமும் , இலங்கை அரசும் அனுமதியழித்த பின்னரும் இராணுவமும் ,புலனாய்வு பிரிவும் தடுப்பதேன் என அங்கு இருந்த மாவீரர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.