எதிர்க்கட்சித் தலைவர் பதவி ரணில் விக்ரமசிங்கவிற்கு!!


ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்கு அமைய எதிர்க்கட்சித் தலைவராக அவரை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உள்ளக பிரச்சினைகள் தனக்கு சம்பந்தம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள போதிலும், தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட சம்பிரதாயங்களுக்கு 
அமைய செயற்படுவதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.