யாழில் இடம்பெற்ற ஆறுமுகநாவலர் நினைவரங்கம்!

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் நினைவரங்கம் யாழில் நடைபெற்றது.


யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் அரங்கில் தமிழ்ச் சங்க உபதலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வை யாழ்ப்பாணம் தமிழ் சங்கமும் கரிகணன் அச்சகத்தினரும் இணைந்து நடத்தினர்.

இதில் நல்லை ஆதீன முதல்வர் ஆசியுரையையும் யாழ்.இந்துக் கல்லூரியின் பிரதி அதிபர் சு.பரமேஸ்வரன் வாழ்த்துரையையும் தமிழ்ச் சங்கத் தலைவர் ச.லலீசன் தொடக்கவுரையையும் ஆற்றினர்.

யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் ச.முகுந்தன் நினைவுப் பேருரையாற்றினார். யாழ். பிரபல பாடசாலைகளின் மாணவர்கள் சொல்லின் செல்வர் செல்வவடிவேல் தலைமையில் பங்கேற்ற பட்டிமண்டபம் இடம்பெற்றது.

தமிழ்ச் சங்கப் பெருந்தலைவர் பேராசிரியர் அ.சண்முகதாஸ் நிறைவுரையாற்றினார். விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.