வல்லினம் - தொடர்கதை- பாகம் 2!!
உடலெங்கும் பரவிய இதமான குளிரில் உடல் சற்று நடுங்கவே செய்தது. அவசரமாய் பல்துலக்கி, முகத்தைக் கழுவிக்கொண்டு, வீட்டிற்குள் வந்தாள்.
சாம்பல் படர்ந்திருந்த அடுப்பை, சுத்தமாக்கியவள், பனிபட்டால் எரியாது. என்று இராத்திரியே அவள் எடுத்துக்கொண்டு வைத்திருந்த சுள்ளியை அடுக்கி அடுப்பைப் பற்றவைத்தாள்.
கேத்தலில் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைத்துவிட்டு. கைகள் இரண்டாலும் முழங்காலைக் கட்டிக்கொண்டு அடுப்பருகில் அமர்ந்துகொண்டாள். குளிருக்கு அந்தச் சூடு இதமாகத்தான் இருந்தது. கைகளை விரித்து அடுப்பில் காட்டினாள். விரல்கள் சூடுபட்டதும் சுருங்கிக்கொள்வது போல உணர்ந்தாள்.
ஸ்ஸ்ஸ்.......எனற இரைச்சலுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் அவசரமாய் எழுந்து, மேலே இருந்த நெஸ்ரமோல்ற் டப்பாவைத் திறந்தாள். காலியாக இருந்தது.
"அட...அம்மாவுக்கு ஆத்துற மா முடிஞ்சுது போல, மனதிற்குள் நினைத்தவளாக தேயிலை டப்பாவை எடுத்து வெறும் சாயம் கலந்த தேநீரை ஊற்றினாள். பால் கறந்தபிறகு பிள்ளைகள் குடிக்கட்டும், என நினைத்துக்கொண்டே, நான்கு கப்புகளை எடுத்து வைத்தாள்.
அம்மாவுக்கும் கொட்டகைக்குள் உறங்கும், அந்த வீட்டின் கடைசி வாரிசான சீராளனுக்கும் முதலில் கொடுத்துவிட்டு வருவோம் என எண்ணியபடியே எடுத்துக்கொண்டு எழுந்தாள். முதலில் அம்மாவின் அறையில் எட்டிப் பார்த்து,
"அம்மா...." எனறாள்.
கட்டிலில் படுத்துக்கொண்டே, "உன்னைத்தான் நினைச்சன், அதுக்குள்ள கொண்டுவந்திட்டாய், தாம்மா" என்றபடி அன்பாக புன்னகைத்தபடியே தேநீரை நீட்டினாள்.
"தம்பிக்கு குடுத்திட்டியே?" கேட்டவரிடம்,
"இல்லையம்மா, உங்களுக்கு தந்திட்டு குடுக்கப்போறன்," என்றபடியே தேநீரோடு நகர்ந்தாள்.
இருபத்தைந்து வயதைத் தொட்டுவிட்ட, சீராளன், அந்த வீட்டின் கடைக்குட்டி என்றாலும் இன்றைய நாளில் அந்தக் குடும்பத்தைத் தாங்குகின்ற தாங்குதூண் அவன்தான். தன்னுடைய குடும்பத்தோடு சேர்த்து அவளையும் சுமக்கிறான். வேறு வழியின்றி அவளும் அந்த வீட்டில் அடைக்கலமாகிவிட்டாள்.
கொட்டகைக்கு சற்று தள்ளி நின்று, சீராளன்....சீராளன்......என்று குரல் கொடுத்தாள்.
"ஓமோம் ......"
அவசரமாய் எழுந்து அமர்ந்தவன், பெரிய கொட்டாவி ஒன்றை வெளிப்படுத்திக்கொண்டே, கையை நீட்டினான்.
தேநீரைக் கொடுத்துவிட்டு, "குடியுங்கோ" என்றபடி சற்று தள்ளி நின்றவள், தன்னிடம் ஏதோ சொல்ல நினைப்பதைப் புரிந்துகொண்ட சீராளன் நிமிர்ந்து ஆரபியைப் பார்த்தான்.
"அம்மாவுக்கு நெஸ்ரமோல்ற் முடிஞ்சிது"
"சரி சரி நான் வாங்கிவாறன்"
தலையைஆட்டியபடி மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள். இசையரசி அக்கா எழுந்துவிட்ட சுவடு தெரிந்தது. இருவருக்குமாக தேநீரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குள் நடந்தாள்.
"ஏய் ......பரிதி ....வாய்க்கால் உடைஞ்சிடும், மாமா அடிப்பான், கவனமா தண்ணியைக் கொண்டுபோய் ஊத்து" தூரத்தில் நடந்த மகளைக் கண்டித்த தாயைப் பார்த்து உதட்டைச் சுழித்த பரிதியைக் கனிவோடு பார்த்தபடி நடந்து வந்தாள் ஆரபி.
கோபிகை,
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை