ஒரு புதிய வகை ஆப்பிள் விற்பனையில்!

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் ஒரு புதிய வகை ஆப்பிள் நேற்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.


இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு இரு தசாப்தங்கள் ஆனதாகவும் கூறப்படுகிறது.

´காஸ்மிக் கிரிஸ்ப்´ என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது ´ஹனிகிரிஸ்ப்´, ´எண்டர்ப்ரைஸ்´ என்பவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.

இந்த திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை´ கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (சுமார் 72 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

"இது மிகவும் மிருதுவானது. அதே சமயத்தில் திடமானதும் கூட. இதில் இனிப்பு, புளிப்பு ஆகிய இரு சுவைகளும் சமநிலையில் இருப்பதுடன், சாறு நிறைந்ததாகவும் உள்ளதாக இந்த புதிய ரக ஆப்பிளை கண்டறிந்த வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான கேட் எவன்ஸ் கூறுகிறார் .

இவ்வகை ஆப்பிளை சரியான முறையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால், பறிக்கப்பட்டது முதல், 10-12 மாதங்களுக்கு தரமும், சுவையும் குறையாமல் இருக்குமெனவும் கேட் தெரிவித்துள்ளார்.

12 மில்லியனுக்கும் மேற்பட்ட ´காஸ்மிக் கிரிஸ்ப்´ ரக ஆப்பிள் மரங்கள், கடுமையான உரிம நடைமுறைகளுக்கு பிறகு, அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் மட்டும் பயிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த வகை ஆப்பிளின் உண்மையான பெயர் டபிள்யூஏ38. எனினும், இவற்றின் சிவப்பு நிற தோலின் மேல் படரும் வெள்ளை நிற புள்ளிகள், இரவுநேர வானத்தை பிரதிபலிப்பதால், இதற்கு ´காஸ்மிக் கிரிஸ்ப்´ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலேயே மிகவும் அதிகளவில் ஆப்பிளை அறுவடை செய்யும் மாகாணமாக விளங்கும் வாஷிங்டனின் பிரபல ஆப்பிள் ரகங்களான ´கோல்டன் டெலிசியஸ்´, ´ரெட் டெலிசியஸ்´ ஆகியவை சமீபகாலமாக ´பிங்க் லேடி´, ´ராயல் கலா´ ஆகிய ரகங்களிடமிருந்து கடுமையான போட்டியை சந்தித்து வருகின்றன.

இதேவேளை வாழைப்பழங்களை அடுத்து அமெரிக்காவில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது பழமாக ஆப்பிள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.