ஒரு கோடி யூனிட்கள் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை!!

ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியான மூன்றே மாதங்களில் சுமார் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.


சியோமியின் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஒகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகமானது.

இந்நிலையில், சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 8 சீரிஸ் விற்பனை ஒரு கோடி யூனிட்களை கடந்துள்ளது. கடந்த வாரம் இந்தியாவில் மட்டும் ஒரே மாதத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டதாக சியோமி தெரிவித்தது.

புதிய விற்பனை மைல்கல்லை கொண்டாடும் வகையில், சீனாவில் ரெட்மி பிராண்டு ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. 10 128 ஜி.பி. மெமரி மாடலை 100 யுவான் விலை குறைத்து ரூ. 12,999 விலையில் விற்பனை செய்கிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ஒளிப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. 10 2 எம்.பி. 10 2 எம்.பி. என மொத்தம் நான்கு கமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. முன்புறம் 13 எம்.பி. செல்ஃபி கமராவும், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஹீலியோ ஜி90டி பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஒளிப்படங்களை எடுக்க 64 எம்.பி. 10 8 எம்.பி. 10 2 எம்.பி. 10 2 எம்.பி. என நான்கு பிரைமரி கமராக்கள், எல்.இ.டி. ஃபிளாஷ், 20 எம்.பி. செல்ஃபி கமரா, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.