சி.சி.டி.வி. கேமராவை பொருத்திய அரச அலுவலருக்கு அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள நரிக்குண்டு நன்னீர் குளப் பகுதியில் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதைக் கண்காணிக்க அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா அச்சுறுத்தல் காரணமாக அகற்றப்பட்டுள்ளது.


குறித்த பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது யாழ் மாநகர சபை ஊடாக நடவடிக்கை எடுக்கும் நோக்குடன், அங்கு வசித்துவரும் அரச அலுவலகர் ஒருவரால் , மாநகர சபை உறுப்பினர்கள் முன்னிலையில் அண்மையில் சி.சி.டி.வி. கேமராவை பொருத்தியிருந்தார்.

இதையடுத்து குளத்தை அண்டியுள்ள பகுதியை சேர்ந்தவர்கள், தன்னார்வாளர்கள், இளைஞர்கள் இணைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை குளத்தினை சுற்றி வீசப்பட்ட கழிவு பொருற்கள், சுற்றியுள்ள பற்றைகள் என்பவற்றை அப்புறப்படுத்தினர்.

இதன்போது மருத்துவ கழிவுகள் அடங்கிய பைகள் அவ்விடத்தில் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அதனுள் பாவித்த ஊசிகள், மருந்து போத்தல்கள் என்பன காணப்பட்டன.

குறித்த மருத்துவக்கழிவுகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை கழிவுகளாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

இதனையடுத்து சி.சி.டி.வி கேமராவை பொருத்திய வீட்டின் உரிமையாளாருக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொலைபேசி இலக்கங்களிலிருந்து தொடச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவர் அந்த சி.சி.ரி.வி. கேமராவை அங்கிருந்து அகற்றியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முன்னெடுக்க வேண்டிய பணியை தன்னார்வத்தில் முன்னெடுத்த குறித்த வீட்டு உரிமையாளர் தமக்கு விடுக்கபட்ட அச்சுறுத்தல் காரணமாக அச்சத்தில் உள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாநகரசபை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் குறித்த இடத்தில் கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் தமது சூழலை பாதுகாக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.