இலங்கை மாணவர்களுக்கு, விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

இருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான வைத்தியர் எம். மதுவந்தி திஸாநாயக்க இரவு நேரத்தில் மாத்திரமல்லாது தொலைபேசி பாவனையை முடிந்த அளவு குறைத்துகொள்வதன் ஊடாக கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.


இருட்டில் கையடக்கதொலைபேசியை உபயோகிப்பதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் வினவிய போபோதே அவர் இதனை கேசரிக்கு தெரிவித்தார்.

அதிக நேரம் கையடக்க தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் ஆபத்தான நிலமை ஏற்பட்டுள்ளது. அத்துடன், இருட்டில் கையடக்க தொலைபேசி திரையை பார்ப்பதன் ஊடாக கண்களின் கருவிழிகள் பாதிப்புக்குள்ளாகும். கண்தோலின் மேற்பகுதியை ( எபிடோமிஸ்) தொலைபேசியின் கதிர்கள் பாதிப்பதனால் தோலின் அதீத வெப்பத்தை தாங்கும் திறன் குறைவடையும்.

இதன்காரணமாக சருமத்தில் வரட்சி உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படும்.அதிக நேரம் கையடக்க தொலைபேசியில் பேசும் போது அதிலிருந்து வெளியேறும் கதிர்கள் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும். அது மூளை,காது ,இதயம் போன்ற உடலின் முக்கிய அங்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

கையடக்கத் தொலைபேசி பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்களின் அளவு அதிகரித்துள்ள நிலையில் ,அதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கையாளுதல் அவசியமானதாகும்.

இந்நிலையில் ,தாய்லாந்து ,சீனாபோன்ற நாடுகளிலும்; கையடக்க தொலைபேசி பாவனையினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை ஆய்வுகளின் படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காணரமாக மூக்கு கண்ணாடியை உபயோகிப்பவர்களின் அளவும் அந்த நாடுகளில் அதிகரித்துள்ளது.

அதேபோன்று எமது நாட்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு பார்வை குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அதிகளிவிலான மாணவர்கள் மூக்குக்கண்ணாடி உபயோகிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கண் குறைபாடுகளை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாடசாலை மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றோம்.

பார்வைக் குறைபாடுகள் ஏற்படுவதற்கு அதிக நேரம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதும் காரணமாகும்.

ஆகவே ,பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்யெ அவசியமானதாகும்.தொலைபேசிப் பாவனையை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் அதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சத்திர சிகிச்சையின் ஊடாகவே குணப்படுத்த வேண்டிய நிலைஏற்படும்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.