மார்ச்சில் ஞானசாரருக்கு எதிரான மனு விசாரணை!

பொதுபலசேனாவின் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் முடிவை சவால் செய்யும் இரண்டு மனுக்கள் எதிர்வரும் 2020 மார்ச் 2ம் திகதி விசாரணை செய்ய உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.


குறித்த மனுக்களை கடத்தப்பட்ட பத்திரிகையாளர் பிரகதீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட மற்றும் மாற்றுக் கொள்கைளிற்கான நிலையம் தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுத்த முடிவு அரசியலமைப்பிற்கு விரோதமானது என அவர்கள் வாதிடுகின்றனர்.

அத்துடன் விடுதலையான நேரத்தில் ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு விதிகபட்ட 19 ஆண்டு சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதிவாதிகள் மாற்றமடைந்துள்ளதால் மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய நீதிமன்றம் மனுதாரர்களுக்கு இன்று உத்தரவிட்டது.

இதேவேளை குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டபோது பதில் மனுதாரர்களாக சட்டமா அதிபர், நீதி அமைச்சர், ஜனாதிபதி செயலாளர், பொலிஸ்மா அதிபர் புஜித் ஜெயசுந்தர, செயல் பொலிஸ்மா அதிபர், மற்றும் வெலிகடை சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னர் பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.