நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பொம்மைகளை வழங்கிய கிறிஸ்மஸ் தாத்தா!

மனிடோபாவில் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி கிறிஸ்மஸ் தாத்தா, பொம்மைகளை வழங்கி மகிழ்வித்துள்ளார்.


புனித ஜோன்ஸ் ஆங்கிலிகன் தேவாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற வருடாந்திர நோர்த் எண்ட் சமூக கிறிஸ்மஸ் விருந்தில் இந்த பொம்மைகள், வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது தன்னார்வலர்கள் 600 இற்குக்கும் மேற்பட்டோருக்கு உணவு மற்றும் வின்னிபெக்கின் நார்த் எண்டில் உள்ள குடும்பங்களிலுள்ள 400 குழந்தைகளுக்கு பொம்மையும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து கிறிஸ்மஸ் தாத்தா கூறுகையில், ‘கிறிஸ்மஸ் என்பது இதுதான். சாப்பிடுவது, வேடிக்கை, சிரிப்பது, பாடுவது. இந்த சமூகத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள், அவர்கள் இப்படி ஒன்று சேருவதைப் பார்க்க, மகிழ்சியாகவுள்ளது.

இங்கே ஒற்றுமையின் உணர்வு இருக்கிறது. மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்தின் ஆவி இருக்கிறது. இது என் இதயத்தை நிரம்பி வழிகிறது’ என கூறினார்.

இதன்போது, பதினொரு வயது ஐசக் சாண்டர்ஸ் மற்றும் அவரது மற்றும் ஆறு வயது சகோதரி அலயா சாண்டர்ஸ் ஆகியோர் கிறிஸ்மஸ் தாத்தாவை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், இசையைக் கேட்பதாகவும் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.