வவுனியா மாணவிக்கு மாவட்ட செயலகத்தில் கௌரவிப்பு!!

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவியான இளம் கண்டுபிடிப்பாளரான பி.ரோகிதாவை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.


லண்டனை சேர்ந்த கந்தப்பிள்ளை திலீபனின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சத்தின் ஊடாக இந்த கௌரவிப்பு நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

தமிழருவி த. சிவகுமாரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சாதனை மாணவிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன் சிறிதளவான நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், சிரேஷ்ட சட்டத்தரணி க.தயாபரன், வைத்திய கலாநிதி கோணேஸ்வரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வர்த்தகர் சங்கம், வர்த்தகர் நலன்புரிச் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகள், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் உட்பட மாணவியின் தாயார் மற்றும் ஆசிரியை உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.