இலங்கையில் ஒரே பிரசவத்தில் 4 ஆண் குழந்தைகள்!
இலங்கையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்துள்ளது.
கண்டி, அலவத்துகொட விலான உடுகம பிரதேசத்தை சேர்ந்த நளிந்த லக்சான் விஜேதுங்க என்பவரது மனைவி தேவிகா உதயங்கனி ஜயசூரிய முதல் பிரசவத்திலேயே 4 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த பிரசவத்திற்கு பின்னர் தாயும் குழந்தைகளும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அக்குரணை பிரதேச சபையின் சிரேஷ்ட உறுப்பினர் சிறிமல் விஜேதுங்கவின் மூத்த புதல்வரே நளிந்த லக்சான் விஜேதுங்க எனவும் அவர் அரச துறையில் பணியாற்றி வருவதாகவும் மனைவி தொழில் புரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்துள்ள நான்கு ஆண் குழந்தைகளுக்கு ஹிருத், வினுத், கெனுத் மற்றும் சனுத் என பெயரிட்டுள்ளதாக தந்தையான நளிந்த லக்சான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
நான்கு குழந்தைகளுக்கும் தாயால் பாலூட்ட முடியாது என்பதால், குழந்தைகளுக்கு பால் மா மூலம் பாலூட்டி வருவதாகவும் அந்த பால் மா டின் ஒன்றின் விலை ஆயிரத்து 500 ரூபாய் எனவும் அது ஒரு நாளுக்கே போதுமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
தாயாருக்கு விசேட பால் மா வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நேரத்தில் பிறந்த நான்கு குழந்தைகளை வளர்ப்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு என்ற போதிலும் அந்த பொறுப்பை தைரியத்துடன் நிறைவேற்ற சகல நடவடிக்கை எடுப்பதாகவும் நளிந்த லக்சான் விஜேதுங்க குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை