தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு!!

பிரபஞ்ச அழகியாக தென் ஆபிரிக்காவின் சோசிபினி துன்சி (Zozibini Tunzi) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


2019ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் அட்லாண்டாவில் நேற்று இடம்பெற்றது.

இதில் இறுதி சுற்றில் தெரிவு செய்யப்பட்ட 7 பெண்களில் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான சோசிபினி துன்சி பிரபஞ்ச அழகியாக தெரிவு செய்யப்பட்டார்.

பிலிப்பைன்சின் முன்னாள் உலக அழகியான கேட்ரினா கிரே துன்சிக்கு பிரபஞ்ச அழகிக்கான கீரிடத்தை சூட்டினார்.

பிரபஞ்ச அழகியாக துன்சி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முன்னர் மேடையில் அவரது பேச்சு அனைவராலும் பாராட்டப்பட்டது.

‘என்னை போன்ற நிறத்தையும், முடியையும் உடைய பெண்கள் அழகானவர்கள் என்று கருதப்படாத உலகத்தில் நான் வளர்ந்தேன்.

ஆனால், இம்மாதிரியான எண்ணங்கள் நிறுத்தப்படுவதற்கான நேரம் இது என்று நினைக்கிறேன்.

குழந்தைகள் என் முகத்தை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பின்னர் அவர்களது முகம் எனது முகத்தில் பிரதிப்பலிப்பதை அவர்கள் பார்க்கலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.