காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை!

ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன.

வடக்கு காஸாவிலுள்ள ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான அல்-காஸம் படையின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தின என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


எனினும், இந்தத் தாக்குதலில் யாரும் உயிரிழந்தாகவோ, காயமடைந்ததாகவோ உடனடி தகவல் இல்லை.

முன்னதாக, தெற்கு இஸ்ரேல் பகுதியை நோக்கி ஹமாஸ் அமைப்பினர் சனிக்கிழமை இரவு 3 ஏவுகணைகளை வீசினர். அந்த ஏவுகணைகள் அனைத்தும், இஸ்ரேலின் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்தது.

ஏவுகணை தாக்குதல் எச்சரிக்கை ஒலியைக் கேட்டு பதுங்கு குழியை நோக்கி ஓடியபோது 3 இஸ்ரேலியர்கள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.