அவுஸ்ரேலியாவில் தண்ணீரைப் பயன்படுத்த கடுமையான கட்டுப்பாடுகள்!
அவுஸ்ரேலியாவின் பெரும்பாலான பகுதிகளை வாட்டிவரும் வெப்பத்தினால், அங்கு தண்ணீரைப் பயன்படுத்த அவுஸ்ரேலியா அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக கிரேட்டர் சிட்னி, ப்ளூ மவுண்டன்ஸ் மற்றும் இல்லாவாரா பகுதி மக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது, இரு பக்கெட் தண்ணீர் கொண்டுதான் வாகனங்களைக் கழுவ வேண்டும், நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பச் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
இதனை மீறும் தனி நபர்களுக்கு 150 அமெரிக்க டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும், வணிக நிறுவனங்களுக்கு 550 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்தின் காரணமாக வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை சீரடையும் வரை இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீறக் கூடாது எனவும் அவுஸ்ரேலிய அரசு கூறியுள்ளது.
இதேவேளை, 40 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ள வெப்பத்தின் காரணமாகக் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் மட்டும் 100 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை