இயக்குநர் மு.களஞ்சியம் மீதான சிங்கள இனவாத வெறிதன தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம்!!

திரைபட இயக்குநர் மு.களஞ்சியம2019ம் ஆண்டு நவம்27 மாவீரர் நாள் நிகழ்விற்காக  யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழகத்தில் இருந்து  இலங்கை சென்றிருந்த
தமிழர் நலம் பேரியக்கம் தலைவரும்,திரைப்பட இயக்குநருமான அண்ணன்  மு.களஞ்சியம் அவர்களை தமிழகம் நோக்கி திரும்புமங் வேலை சிங்கள பேரினவாத இராணுவம் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்து, பல்வேறு வகையில்  உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவரை கடுமையாகத் தாக்கி துன்புறுத்தி கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை என்ற பெயரில் அவரை ஒரு அறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளது.
முதுகில் பலத்த காயம் ஏற்பட்டதால் தற்போது அண்ணன் களஞ்சியம் அவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.