என்னைவிட்டு போனவளே - கவிதை!!
கரிசல் காட்டு காதலியே
சொப்பனங்களில் கூட
விட்டுவைக்கவில்லை - உன்
நினைவலைகள்.....
முள்ளாக நான் விலக
தெள்ளாக ஒட்டிக்கொண்டாய்,
ஒட்டொட்டி போல வந்து
என் நெஞ்சை தட்டிக்கொண்டாய்.
என் காதல் ஏட்டினிலே
வரைந்ததெல்லாம்
உன் முகம் தான்
பாதகத்தி நீ
போனதென்ன விதி வழியே....
தொட்டுவிடாது நீயும்
பட்டுவிடாது நானும்
பார்த்து மகிழ்ந்த
நாட்களெண்ணி
கண்ணோரம் கரிக்குதடி.
உன் ஜனனம் எனக்கென்றும்
என் ஜனனம் உனக்கென்றும்
ஓயாமல் சொல்லிக்கொண்டாய்,
எங்கே அந்த வார்த்தைகள்?
இன்னும் காத்திருக்கிறேன்,
இந்த கரிசல் காட்டில்தான்,
இன்னொரு பிறவிகொண்டேனும்
எனைச்சேர வருவாயென்று......
கோபிகை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை