இன்று 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம் நினைவு நாள்.!
புலிகள் அமைப்பில் ஒரு மரபு இருக்கிறது.
படை நடவடிக்கைகளின் போது எதிர்பாராத விதமாக பின்னடைவு ஏற்பட்டால் அதை சம்பந்தப்பட்ட தளபதிகள், பொறுப்பாளர்களின் கவனக்குறைவாக கருதி அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு தமது முன்னைய பதவி நிலையிலிருந்து தரம் இறக்கப்படுவார்கள்.
அதை 'காத்து புடுங்குதல்' என்று சொல்லுவோம்.
இதற்கு யாருமே விதிவிலக்கல்ல.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதும் அண்டன் பாலசிங்கம் தலைமையில் அணிகள் 'இராஜதந்திரப் போரை' எதிர்கொள்ள களமிறக்கப்பட்டன.
ஒரு கட்டத்தில் ஒஸ்லோவில் வைத்து தமிழர் தேசத்திற்கு எதிராக Co chairs எனப்படும் இணைத்தலைமை நாடுகள் ஒரு பொறியை வைக்கின்றன.
இதுதான் ஒஸ்லோ உடன்படிக்கை.
இன்று கதைக்கப்படும் உள்ளக சுயநிர்ணயம் உட்பட இன்ன பிற உப்புசப்பில்லாத தீர்வுகளின் மூலம் வேர்விட்ட இடம் அதுதான்.
'புரொஜெக்ட் பீக்கான்' எனப்படும் தமிழர் தேசத்திற்கு எதிரான அனைத்துலக சதியின் ஒரு பகுதியாகவே இது அரங்கேறியது.
பேச்சுவார்த்தைகளை பின்தளத்திலிருந்து கண்காணிக்க வந்த, இதுவரை அடையாளம் காணப்படாத தலைவரின் நேரடி நெறிப்படுத்தலில் இயங்கும் 'இராஜதந்திர புலனாய்வு' அணி ( இவர்கள் தான் இன்றளவும் திரைமறைவில் இயங்கும் புலிகளின் Think Tank. ) தொடர்ச்சியாக தலைவருக்குத் தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
தலைவர் விழிப்படைகிறார்.
"வெற்றி தோல்வி முக்கியமில்லை. அடுத்த தலைமுறைக்கு தெளிவான வரலாற்றையே விட்டு செல்ல வேண்டும்.” என்பதில் தெளிவுள்ள தலைவர், சுயம் இழக்காமல் முடிந்தவரை போராடிய அண்டன் பாலசிங்கம் ஒரு கட்டத்தில் அனைத்துலக பொறியை கையாள்வதில் பின்னடைந்துவிட்டதை உணர்கிறார்.
அவரிடம் விளக்கம் கேட்கப்படுகிறது. பின்னடைவை ஏற்றுக்கொண்டு அதற்கான தார்மீக பொறுப்பையும் ஏற்கிறார்.
விளைவாக பாலா அண்ணையின் 'காத்து புடுங்கப்படுகிறது'.
தமிழர் தேசத்தின் விட்டுக்கொடுக்கப்படாத இறைமையின் அடிப்படியிலேயே பேச்சுக்கள் அமைய வேண்டும் என்ற முன் நிபந்தனையின் அடிப்படையில் தமிழ்ச்செல்வன் தலைமையில் அணிகள் சீரமைக்கப்பட்டு புலிகள் மீண்டும் களமிறக்கப்பட்டார்கள்.
அவருடைய நினைவு நாளில் இந்த வரலாறு புரிந்து கொள்ளப்படுவது அவசியம்.
ஏனென்றால் நடந்த சம்பவங்களின் வரலாற்று புரிதல் இல்லாமல் அவரை 'மேற்குலகின் கைப்பாவை' என்று ஒரு தரப்பும், அவரின் கடைசி நம்பிக்கையாக ஒஸ்லோ உடன்பாடு இருந்ததாகவும் பலர் பேசத் தலைப்பட்டுள்ளார்கள்.
இது ஒரு வரலாற்று மோசடி.
அவர் தமிழர் தேசத்தின் மதியுரைஞர். அதுதான் அவர் 'தேசத்தின் குரல்' ஆக மதிப்பளிக்கப்பட்டார்.
அதே நேரம் தமிழர் தேசத்தின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு உடன்படிக்கைக்கு தன்னையறியாமலேயே காரணமாக இருந்தார் என்பதற்காக தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதையும் ஒரு சேர நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் வரலாறு முக்கியம்.
மற்றபடி 'தேசத்தின் குரலாக' அவர் தமிழீழ வரலாற்றில் என்றென்றும் நினைவு கொள்ளப்படுவார்.

கருத்துகள் இல்லை