வடக்கை அழகுபடுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது- கேணல் ரட்ணபிரிய!!
வடக்கு மாகாணத்தை அழகுபடுத்தி முன்னுதாரணமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக பாதுகாப்பு பிரிவின் வடமாகாண இணைப்பாளர் கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் வடக்கினை அழகுபடுத்துவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கான முதற்கட்ட வேலைத்திட்டமாக சித்திரங்கள் வரைகின்ற செயற்பாட்டை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் கேணல் ரட்ணபிரிய பந்து சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சித்திரங்களானது அந்தந்த பகுதியினை பிரதிபலிக்கின்ற கலாச்சாரங்களை உள்ளடக்கியதாகவே அமையுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே வீணான போலி பிரசாரங்களை செய்ய வேண்டிய தேவையில்லை. இத்திட்டத்திற்கான அனைவரது ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம் என கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்தார்.
இதன்போது வவுனியா மாவட்ட ஒருங்கினைப்புக்குழு தலைவர் ஏ.டி.தர்மபால, பொதுஜன பெரமுனவின் வவுனியா மாவட்ட தமிழ் பிரிவின் அமைப்பாளர் எஸ்.கணேசலிங்கம், மடுக்கந்த மங்களாராமய விகாராதிபதி பியூலேகெதர மங்கள தேரர் மற்றும் இந்துமத குரு ரட்ணம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை